பிக்பாஸ் வீட்டிற்கு சென்ற இரண்டு பிரபலங்கள் கற்பமாகியுள்ளனர்!!
கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியில் மூலம் பிரபலமானவர், நடிகர் கணேஷ் வெங்கட்ராமன், இவர் ஏற்கனவே, ராதா மோகன் இயக்கத்தில்’அபியும் நானும்’ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். இதனைத் தொடர்ந்து ‘உன்னைப் போல் ஒருவன்’, ‘கோ’ உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.
கணேஷ் வெங்கட்ராமனுக்கும், தமிழ் தொகுப்பாளினி மற்றும் சின்னத்திரை நடிகையுமான நிஷாவுக்கும் திருமணமாகி சில வருடங்கள் கடந்துள்ள நிலையில், தனது மனைவிக்கு பாரம்பரிய முறையில் சீமந்தம் நடைபெற்றதாகவும், எங்கள் வீட்டில், புதுவரவை வரவேற்கவிருக்கிறோம் எனவும் ட்விட் செய்துள்ளார் கணேஷ் வெங்கட்ராமன்.
Welcoming d soon to come ‘New Arrival’ ?? in d family & seeking blessings fr my love @Nishaganesh28 wit a traditional Seemandham ?
Excited abt this New Phase of life ‘Fatherhood’ ?
Time to grow up myself ??#WeAreExpecting#ComingSoon#PositiveVibes#Family#Fatherhood pic.twitter.com/HRxInhckVc— Ganesh Venkatram (@talk2ganesh) April 11, 2019
இதற்க்கு முன்னதாக, தமிழில் வெளியான கிடாரி, இரவுக்கு ஆயிரம் கண்கள், வாடீல் ஆகிய படங்களில் நடித்த சுஜா வருணி, கடந்த முறை நடந்த பிக்பாஸ் முதல் சீசனில் வைல்ட் கார்ட் எண்ட்ரியாக நிகழ்ச்சியில் இணைந்தார். இந்தநிலையில் சுஜா வருணி தற்போது கர்ப்பமாக உள்ளார் என தகவல்கள் வெளியானது. இந்த தகவலை அவரது கணவர் சிவகுமார் தனது சமூகவலைதள பக்கத்தில் உறுதி செய்தது குறிப்பிடத்தக்கது.