ஏ-9 வீதியில் இடம்பெற்ற கோரவிபத்தில் வெளிநாட்டிலிருந்துவந்த வெள்ளைக்காரர் உட்பட 5 பேர் படுகாயமடைந்துள்ளதாகவும் 3 பேர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
குறித்த விபத்து இன்று காலை இடம்பெற்றுள்ளது,
ஏ-9 வீதி மாத்தள மறவட்ட பகுதியில் கொண்டெயினர் மற்றும ஹயஸ், வாகனங்கள் மோதி இந்த கோரவிபத்து இடம்பெற்றுள்ளது,
குறித்த விபத்தில் வெளிநாடு ஒன்றைச் சேர்ந்த வெள்ளைக்காரர், அவருடன் வந்த இருவர் மற்றும் இலங்கையை சேர்ந்த 2 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது
சம்பவத்தில் படுகாயமடைந்தவர் அப்பகுதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மேலதிக தகவல்கள் தெரிவிக்கின்றன,
குறித்த விபத்து இடம்பெற்றபோது தென்னிலங்கை மக்கள் உடனடியாக உதவாமல் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்ததாகவும் விமர்சனங்கள் எழுந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.