கன்னியாகுமரி மாவட்டத்தில் வசித்து வரும் மாணவி அங்குள்ள பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு பயின்று வருகிறார். இவர் கடந்த 19 ம் தேதியன்று பெற்றோரிடம் பள்ளிக்கு சென்று வருவதாக கூறிவிட்டு சென்றுள்ளார். இதற்க்கு பின்னர் பள்ளியின் நேரம் முடிவடைந்தும் இல்லத்திற்கு வராமல் இருந்துள்ளார்.
இதனையடுத்து நீண்ட நேரம் ஆகியும் மாணவி வராததால்., பதற்றமடைந்த பெற்றோர்கள் மாணவியை அவர்களுக்கு தெரிந்த இடமெல்லாம் தேடி அலைந்துள்ளனர். மாணவியை எங்கு தேடியும் கிடைக்காததால் பதற்றமடைந்து காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
இவர்களின் புகாரை ஏற்ற காவல் துறையினர் மேற்கொண்ட விசாரணையில்., மாணவியின் அலைபேசியில் இருந்து அதே பகுதியை சார்ந்த ஜோஸிப்ளின் ராஜ்குமார் (வயது 22) என்பவரிடம் பேசி வந்தது தெரியவந்துள்ளது.
இதனையடுத்து தகவலை அறிந்த காவல் துறையினர் ராஜ்குமாரின் அலைபேசி எண்ணை சோதனை செய்ததில் கேரள மாநிலத்தில் இருப்பது தெரியவந்துள்ளது. இதனை அறிந்த காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து ராஜ்குமாரை கைது செய்து மாணவியை மீட்டனர்.
இது குறித்து ராஜ்குமாரின் மீது வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் மேற்கொண்ட விசாரணையில்., கடந்த ஒரு வருடமாக மாணவி பயின்று வரும் பள்ளிக்கு சென்று விதவிதமான ஆடைகளை அணிந்து மாணவியை மயக்கி., காதல் வலையில் விழ வைத்துள்ளான்.
இதுமட்டுமல்லாது இருவரும் சென்று சந்தோசமாக வாழ்க்கையை துவங்கலாம் என்று கூறி மாணவியின் இல்லத்தில் இருந்து பணம் மற்றும் நகைகளை கொண்டு வர சொல்லி மாணவியை மயக்கியுள்ளான்.
இதனை கேட்ட மாணவி காதலனின் ஆசையை ஏற்று அவனுடன் கேரளாவிற்கு சென்ற பிறகே ராஜ்குமார் கட்டிட தொழிலாளி என்பதும்., மாணவி கொண்டு வந்த நகை மற்றும் பணத்தை வைத்து இத்தனை நாட்கள் கேரளாவில் வாழ்க்கையை கடத்தி வந்ததும் தெரியவந்துள்ளது.
மேலும்., மாணவியிடம் பல ஆசைவார்த்தைகளை கூறி அவனது ஆசைக்கும் இணங்க வைத்துள்ளான் என்பது காவல் துறையினரின் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த காவல் துறையினர் ராஜ்குமாரிடம் தீவிர விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.