திமுகவுக்கு எதிராக களமிறங்கிய, மு.க. அழகிரியின் வேட்பாளர்.!

வரும் 18 ஆம் தேதி மக்களவை தேர்தல், சட்டமன்ற இடைத் தேர்தல்கள் நடைபெற உள்ளன. இந்த தேர்தலில் மு.க. அழகிரி ஆதரவு யாருக்காக இருக்கும் என்று அனைவராலும் எதிர்பார்க்கப்பட்டது.

அவரின் கருத்து என்னவாக இருக்கும் என்றும், அனைத்து கட்சிகளும் பரபரப்பாக எதிர்பார்த்து காத்திருந்த நிலையில், மக்களவை தேர்தலில் என்னுடைய ஆதரவு யாருக்கு என்பது குறித்து ஒருவாரத்தில் தெரிவிப்பேன் என்று மு.க. அழகிரி அறிவித்தார்.

இந்நிலையில், திருவண்ணாமலை மக்களவை தொகுதியில் திமுக வேட்பாளர் அண்ணாதுரையை எதிர்த்து தொலைக்காட்சி சின்னத்தில், மு.க. அழகிரி ஆதரவுடன் ராகுநாதன் போட்டியிடவதாக பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். இவர், மறைந்த திமுக தலைவர் கருணாநிதி, அவரது மகன் மு.க.அழகிரியின் பெயர் மற்றும் புகைப்படங்களை பயன்படுத்தி பிரச்சாரம் செய்கிறார். இதனால், திமுக தரப்பில் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது.

இது குறித்த சுயேட்சை வேட்பாளர் ரகுநாதன் கூறியவை, திருவண்ணாமலை எனது சொந்த ஊராகும். தற்போது, சென்னை குரோம்பேட்டை அடுத்த சிட்லப்பாக்கத்தில் வசித்துவருகிறேன். சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றுகிறேன். திமுகவில் கடந்த 20 ஆண்டுகளாக உறுப்பினராக இருக்கிறேன்.

நான், மு.க. அழகிரியின் விசுவாசி. கடந்த 2011-ல் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் திருவண்ணாமலை தொகுதியில் போட்டியிட வாய்ப்பு கேட்டு, திமுக தலைமையிடம் விருப்ப மனு கொடுத்தேன்.

ஆனால் எனக்கு வாய்ப்பு கொடுக்கவில்லை. அதனால், திருவண்ணாமலை மக்களவைத் தொகுதியில் சுயேட்சையாக போட்டியிடுகிறேன். எனக்கு மக்கள் பத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது என்று கூறினார்.