திருமணநாள் கொண்டாட்டம்! புகைப்படத்தை வெளியிட்ட கவர்ச்சி புயல்!

பாலிவுட்டில் ஏராளமான ஆபாச படங்களில் நடித்து பிரபலமானவர் கவர்ச்சி புயல் சன்னி லியோன். இவருக்கென உலகம் முழுவதும் ஏராளமான ரசிகர் பட்டாளமே உள்ளது.

சன்னி லியோன் தமிழில் வடகறி என்ற படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடியுள்ளார். இதனை தொடர்ந்து தமிழ் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் வீரமாதேவி என்ற படத்திலும் நடித்துள்ளார்.மேலும் நடிகர் விஷால் நடிக்கும் அயோக்யா படத்திலும் ஒரு பாடலுக்கு நடனமாட உள்ளார்.

மேலும் ரங்கீலா என்ற படத்தின் மூலம் மலையாளத்திலும் அறிமுகமாக உள்ளார் நடிகை சன்னி லியோன் கவர்ச்சி புகைப்படங்களை சமூக வலை தளங்களில் வெளியிடுவதை வழக்கமாக வைத்திருந்தார்.

இந்நிலையில் இவர் சமீபத்தில் திருமண நாளை தனது கணவருடன் கோலாகலமாக கொண்டாடியுள்ளார்.அப்பொழுது அவர் தனது கணவருக்கு லிப் லாக் முத்தம் கொடுத்த புகைப்படம் ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

மேலும் தனது மகள் உருவாக்கிய கேக்கை கொண்டு தங்களது திருமண நாளை சிறப்பாக கொண்டாடியதாகவும் பதிவிட்டுள்ளார். இந்நிலையில் அவர்களுக்கு ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.