இந்த வலியை சொல்ல வார்த்தையே இல்லை.. ஆர்.ஜே பாலாஜி வெளியிட்ட பதிவு!

இலங்கை கண்டியில் பிறந்தவர் நடிகர் ஜே கே ரித்திஷ். இவர் சின்னப்புள்ள என்ற படத்தில் நடித்ததன் மூலம் சினிமாத்துறையில் அறிமுகமானார். மேலும் இவர் பல படங்களை தயாரித்து இயக்கியும் உள்ளார்.

இதனை தொடர்ந்து திமுகவில் உறுப்பினராக இருந்த ஜே.கே ரித்தீஷ் 2009 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிட்டு நாடாளுமன்ற உறுப்பினராக வெற்றி பெற்றார். பின்னர் 2014ஆம் ஆண்டு திமுகவை விட்டு விலகி அதிமுகவில் இணைந்தார்.

இதனைதொடர்ந்து நாயகன் என்ற படத்தில் நடித்ததன் மூலம் அவர் பெருமளவில் பிரபலமானார். மேலும் அவர் தற்போது வெளியான எல்கேஜி படத்திலும் நடித்துள்ளார்.

ஜே.கே ரித்தீஷுக்கு 2007 ஆம் ஆண்டு ஜோதீஸ்வரி என்பவருடன் திருமணம் நடைபெற்றது. மேலும் இவர்களுக்கு இரு மகன்கள் உள்ளனர்.

இந்நிலையில் நடிகர் ரித்தீஷ் ராமநாதபுரம் பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன் என்பவரை ஆதரித்து பிரச்சாரப் பணிகளில் ஈடுபட்டு வந்தார். இந்நிலையில் இன்று அவர் வீட்டில் ஓய்வெடுத்த நிலையில் மாரடைப்பு ஏற்பட்டு திடீரென உயிரிழந்துள்ளார். இது அரசியல் கட்சி மற்றும் திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் எல்கேஜி படத்தில் ரித்திஷுடன் இணைந்து நடித்த நடிகர் ஆர்ஜே பாலாஜி வருத்தம் தெரிவித்து தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் ஜேகே ரித்தீஷ் அவர்களின் இறப்பு செய்தியை கேட்டது எனக்கு பெரும் அதிர்ச்சியை அளிக்கிறது . என்னால் இதை நம்பவே முடியவில்லை . அவருக்கு வெறும் 46 வயது தான் ஆகிறது. அவர் எனக்கு நல்ல சகோதரர். அவர் பலருக்கு உதவியதோடு பலருடைய வாழ்க்கையையும் மாற்றியுள்ளார். இந்த வலியை விவரிக்க என்னிடம் வார்த்தையே இல்லை என வருத்தத்துடன் பதிவிட்டுள்ளார்.