கேரள மாநிலத்தை சார்ந்த இளம் இராணுவ வீரர் வைசாக்., இவர் குஜராத்தில் உள்ள இராணுவ முகாமில் பணியாற்றி வந்தார். இவருடைய மனைவியின் பெயர் அஞ்சனா. இராணுவ வீரரான வைசாக் பணி நிமித்ததின் காரணமாக குஜராத்திற்கு சென்று விட்ட நிலையில்., சில நாட்கள் கழித்து இவர் பணியாற்றிய இடத்திலேயே கடந்த 19 ம் தேதியன்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இந்த விஷயம் குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொள்ள வழக்குபதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொண்டு வந்த சூழ்நிலையில்., தற்கொலை செய்து கொண்ட வைசாக் தனது சகோதரருக்கு கடிதம் ஒன்றை எழுதி விட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். அந்த கடித்தில்., கடந்த ஜனவரி மாதத்தில் இராணுவ வீரர் வைசாக்க்கும் அதே பகுதியை சார்ந்த அஞ்சனாவிற்கும் திருமணம் நடைபெற்றது. அஞ்சனாவிற்கும் திருவனந்தபுரத்தை சார்ந்த அமிதாப் என்பவருக்கும் காதல் இருந்து வந்துள்ளது.
இந்த விஷயத்தை மறைத்து அஞ்சனா திருமணம் செய்து கொண்ட நிலையில்., கணவருக்கு ஏற்பட்ட பணி நிமித்ததின் காரணமாக குஜராத்திற்கு சென்றுள்ளார். தனது முன்னாள் காதலை மறக்க முடியாமல் தவித்து வந்த அஞ்சனா மீண்டும் தனது காதலரை சந்தித்துள்ளர்.
இவர்கள் இருவரும் அவ்வப்போது சந்தித்து உல்லாசம் அனுபவித்து வந்த நிலையில்., அமிதாப்பிற்கு தேவையான பண உதவிகளை அஞ்சனா செய்து வந்துள்ளார். இந்த சூழ்நிலையில்., வைசாக்கிற்கு தொடர்பு கொண்ட அமிதாப்., நான் உங்கள் மனைவியின் முன்னாள் காதலர்., நாங்கள் இருவரும் மீண்டும் தாம்பத்தியம் மேற்கொள்ளும் அளவிற்கு இணைந்துவிட்டோம்., தாம்பத்தியமும் மேற்கொண்டுவிட்டோம்.
நீங்கள் ஊருக்கு வரும் சமயத்தில் பிள்ளையை கொஞ்சினால் அது உங்கள் குழந்தையல்ல எனது குழந்தை என்று கூறியுள்ளான்., மேலும் அவரிடம் தகாத பல வார்த்தைகளையும் கூறியுள்ளான். இதனை கேட்டு பெரும் அதிர்ச்சிக்கு உள்ளான வைசாக்., மனதளவில் பெரும் துயரத்திற்கு உள்ளாகி தற்கொலை முடிவு செய்து., தனது சகோதரருக்கு கடிதம் எழுதிவிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
இந்த கடிதம் வைசாகின் சகோதரருக்கு கிடைக்கவே., இந்த வழக்கு தொடர்பான விசாரணைக்கு காவல் துறையினர் வசம் அவரது கடிதத்தை வழங்கியுள்ளார். மேலும்., இது தொடர்பாக காவல் துறையினர் இருவரிடமும் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில்., அமிதாப்பிற்கு பல பெண்களுடன் தொடர்பு உள்ளதாகவும்., இந்த சம்பவத்தால் ஒரு இளம் பெண் தற்கொலை செய்து கொண்டதும் தெரியவந்துள்ளது. இந்த தகவலை அறிந்த காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.