யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்து கொண்டிருந்த வேன் ஒன்று விபத்துக்குள்ளாதில் பெண்ணொருவர் பலியாகி உள்ளார்.
இந்த அனர்த்தம் காரணமாக மேலும் நான்கு பேர் படுகாயம் அடைந்து சிலாபம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
வெள்ளவத்தை பிரதேசத்தினை சேர்ந்த 48 வயதுடைய பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
வேனும் மற்றும் பாரவூர்தி ஒன்றும் நேருக்கு நேர் மோதுண்டு குறித்த விபத்து நேர்ந்துள்ளதாக காவற்துறை தெரிவித்துள்ளது.
சிலாபம் – புத்தளம் பிரதான வீதி ஆரச்சிகட்டுவ பிரதேசத்தில் இன்று அதிகாலை விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
லண்டனில் இருந்து வருகை தந்த பெண் பலி (2ND)
யாழிலிருந்து கொழும்பு சென்ற ஹயஸ் எரிபொருள் பவுஸருடன் சிலாபம் ஆரச்சிகட்டுவவில் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியது. இச்சம்பவம் இன்று அதிகாலை 2.45 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
இதில் ஹயஸ் வாகனத்தில் பயணம் செய்த 4 பேர் படுகாயம் அடைந்ததுடன் நயினாதீவு 5ம் வட்டாரத்தைச் சேர்ந்த லண்டனில் இருந்து வருகை தந்த அருன்மாறன் கலா என்ற பெண் பலியாகியுள்ளார்.
காயமடைந்தவர்கள் சிலாபம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விபத்து குறித்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.