முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசாவின் நெருங்கிய உதவியாளராக இருந்த சாதிக்பாட்சா 2 ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் சிபிஐ விசாரணை வளையத்துக்குள் கொண்டு வரப்பட்ட போது, அவர் மர்மமான முறையில் மரணமடைந்தார். தனது கணவரின் சாவில் மர்மம் இருப்பதாக அவரது மனைவி எஸ்.ரேஹாபானு கூறியுள்ளார்.
அப்போது பேசிய அவர், இன்றளவும் என்னுடைய உயிருக்கு ஆபத்து நீடிக்கிறது. எனது கணவரின் மரணத்திற்கு வெளியில் இருக்கும் சிலர் தான் காரணம்.
ஆகவே எனது கணவரின் மர்மசாவு தொடர்பான வழக்கை மீண்டும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விசாரிக்க வேண்டும். எனது கணவர் உயிருடன் இருந்த போது அவரிடம் விசாரணை நடத்தப்பட் டது.
அப்போது எனது கணவர் விசாரணை அதி காரிகளிடம் வாக்குமூலம் அளித்தார். அவர் அப்படி என்ன சொன்னார் என்பது குறித்து மறுவிசாரணை நடத்தப்பட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். மு.க.ஸ்டாலின், ஆ.ராசா உட்பட சிலரிடம் எனது கணவர் அப்போது பேசியிருக்கிறார்.
ஆகவே இதுகுறித்தும் மறுவிசாரணை நடத்தப்பட வேண்டும். 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலில் குற்றம் சாட்டப்பட்டுள்ள சாகித்பால்வாவை தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் சந்தித்து பேசினார் என்று விசாரணையின் போது எனது கணவர் விசாரணை அதிகாரிகளிடம் தெரிவித்து இருக்கிறார்.
இதற்கு பிறகு என் கணவருக்கு மிரட்டல் கள் வரத் தொடங்கின. அவருக்கு மிரட்டல்கள் விடுக்கப்பட்டன. இந்த விசாரணையின் போது தான் 2011 மார்ச் 11–ம்தேதி எனது கணவர் மர்ம மான முறையில் மரணமடைந்தார்.
எனது கணவர் மனவலிமை மிக்கவர். ஆகவே அவர் தற்கொலை செய்து கொண்டார் என்று நான் ஒரு போதும் நம்ப மாட்டேன். எனது கணவர் மர்ம சாவு குறித்து மறு விசாரணை நடத்தினால் உண்மைகள் வெளிவரும்’ என்று கூறியுள்ளார்.