விழுப்புரத்தில் வேட்பாளரை ஓடவிட்டு அடித்த பொதுமக்கள்.!

மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாளுக்கு இன்னும் 4 நாட்களே உள்ள நிலையில், தமிழகம் முழுவதும் அரசியல் கட்சி தலைவர்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த மக்களை தேர்தலில் திமுக கூட்டணியில் போட்டியிடும் விடுதலை சிறுத்தை கட்சி, தனி சின்னத்தில் ஒரு தொகுதியிலும், விசிக்காவின் பொதுச்செயலாளர் ரவிக்குமார் திமுகவில் இணைந்து உதயசூரியன் சின்னத்திலும் போட்டியிடுகிறார்.

இந்நிலையில், நேற்று விழுப்புரம் மக்களவை தொகுதிக்கு உட்பட்ட கோலியனூர் பகுதியில் திமுகவின் உதய சூரியன் சின்னத்தின் வேட்பாளர் ரவிக்குமார் வாக்கு சேகரிக்க சென்றார்.

அப்போது அந்த பகுதி மக்கள், ஈழ தமிழர்களை கொன்று குவித்த கூட்டணி எங்கள் பகுதிக்கு வர கூடாது, இந்து மதத்தையும், மாற்று சமூகத்தையும் கேவலமாக பேசிய கூட்டணி எங்கள் பகுதிக்கு வரக்கூடாது, கச்ச தீவை தரை வார்த்த கூட்டணி எங்கள் பகுதிக்கு வர கூடாது, பெண்ணை காலால் எட்டி உதைக்கும் கூட்டணி எங்கள் பகுதிக்கு வரக்கூடாது என்று கோஷமிட்டனர்.

மேலும் வந்த வழியே திரும்பி போ என்று கோஷமிட்டு வேட்பாளர் ரவிக்குமார் மற்றும் அவருக்கு ஆதரவாக வந்தவர்களை துரத்தியடித்தனர். அப்போது சில மர்ம நபர்கள் கல் வீசியதில், ரவிக்குமாரை ஆதரித்து வாக்கு கேக்க வந்த ஒருவருக்கு மண்டை உடைந்தது. இதனால் அந்த பகுதியே பதற்றமான சூழ்நிலைக்கு தள்ளப்பட்டது. உடனே ரவிக்குமார் வந்த வழியாக தெறித்து ஓடினார்.

இந்த கல்வீச்சுசம்பவம் குறித்து வழக்கு பதிந்துள்ள போலீசார், முதல் கட்டமாக 4 பேர் மீது சந்தேகத்தின் பேரில் வழக்குப் பதிவு செய்துள்ளதாக தெரிகிறது.