கணவன் மனைவி வாழ்கை என்பது நம் அனைவரது வாழ்க்கையிலும் என்றோ ஒரு நாள் அனுபவிக்க போகும் ஒன்று.பலருக்கு இந்த வாழ்கை மோசமாகவும் பலருக்கு இந்த வாழ்க்கை சிறப்பாகவும் தெரியும்.
ஆனால் உண்மையில் ஒரு கணவன் மனைவி வாழ்க்கையை சொர்க்கம் போல அமைய கீழே கொடுக்கப்பட்டுள்ள விசயங்களை படித்து பயன்பெற்றுகொள்ளுங்கள்.
தான் வருவதற்கு நேரம் ஆகும் என்றால் போன் செய்து நீ சாப்பிடு என்று கூறும் கணவர்கள்,,சலிப்பாக இருக்கிறது என்றால் நீ தூங்கு நான் பார்த்து கொள்கிறேன் என கூறும் கணவர்கள்தனது தேவையை குறைத்து மனைவிக்கு வேண்டியதை வாங்கும் கணவர்கள், மனைவி வீட்டு உறவினர்கள் வந்தாலும் பாகுபாடு இல்லாமல் உபசரிக்கும் கணவர்கள்,
சமையல் அறையில் கூட நின்று உதவி சங்கீதமாக்கும் கணவர்கள்,ஞாயிறு என்றால் மனவியை வெளியே கூட்டிச் சென்று மகிழ்விக்கும் கணவர்கள்மனைவி உடல் நலமில்லை என்றால் பதறித் துடிக்கும் உள்ளம்,மனைவியிடம் எந்த விஷயமாக இருந்தாலும் கலந்தாலோசிக்கும் உள்ளம்.
மனைவி கோபத்தில் கத்தினாலும் அமைதி காத்து புரிய வைப்பது,ஆக மொத்தம் மனிதன் மனிதனாக மனிதத்தன்மையுடன் நடந்து கொள்வது,இத்தனை நற்குணங்களும் அமையப் பெற்ற வாழ்க்கைத் துணைவரை அடைந்த இல்லத்தரசிகள் அனைவருமே புவியில் சொர்க்கம் காணும் புண்ணிய ஆத்மாக்கள்.