மிக மூத்த நடிகருக்கு ஐஸ்வர்யா ராய் ஜோடி?

மணிரத்னம் அடுத்து பொன்னியின் செல்வன் கதையை திரைப்படமாக எடுக்கவுள்ளார். அதில் இந்திய சினிமாவில் பல டாப் நட்சத்திரங்கள் நடிக்கவுள்ளனர்.

இந்நிலையில் இந்த படத்தில் நடிகர் சத்யராஜ் இணைந்துள்ளார் என்று தகவல் கசிந்துள்ளது. அவர் பெரிய பழுவேட்டரையர் ரோலில் தான் நடிக்கிறாராம்.

அவருக்கு மனைவி நந்தினி ரோலில் தான் நடிகை ஐஸ்வர்யா ராய் நடிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.