தோனிக்காக குரல் கொடுத்த முன்னணி தமிழ் நடிகர்

சமீபத்தில் ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் சிஎஸ்கே அணியின் கேப்டன் தோனி மைதானத்தில் இறங்கி நடுவர்களுடன் வாக்குவாதம் செய்தது சர்ச்சையானது. அதனால் அவருக்கு அந்த போட்டியின் சம்பளத்தில் இருந்து 50% அபராதம் விதித்தனர்.

மேலும் தோனி செய்தது தவறு என சர்வதேச அளவில் பல கிரிக்கெட் வீரர்கள் கருத்து தெரிவித்தனர். இந்நிலையில் இந்த சர்ச்சை பற்றி பிரபல தமிழ் நடிகர் விக்ரம் பிரபு ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். “தட்டிக் கேட்ட தோனிய திட்றாங்க. அப்ப யாரை விட்டு வைப்பாங்க?” என காட்டமாக அவர் கேட்டுள்ளார்.

அம்பையர் தவறு செய்ததற்கு வீடியோ ஆதாரம் உள்ளது. ஆனாலும் அதை தட்டிக்கேட்ட விதத்தை பலரும் குறை சொல்கிறாரக்ள். என் தலைவனை விட்டுவிடுங்கள்” என அவர் மேலும் கூறியுள்ளார்.