அழகான கேரள பெண்களுடன் கொண்டாட்டம் போட்ட விஜய்!

தென்னிந்திய சினிமா முழுக்க ரசிகர்களையும், ரசிகைகளையும் பெற்றவர் விஜய் தேவரகொண்டா. அர்ஜூன் ரெட்டி, கீதா கோவிந்தம் என அடுத்தடுத்து அவருக்கு வந்த படங்கள் அவருக்கு அப்படியான ஒரு சிறப்பை கொடுத்துவிட்டது.

அடுத்ததாக அவரின் நடிப்பில் டியர் காம்ரேட் படம் வரவுள்ளது. மே மாதம் 31 ம் வெளியாகவுள்ள இப்படத்தின் டீசர் அண்மையில் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.

இப்படத்தில் அவருடன் மீண்டும் நடிகை ராஷ்மிகா நடித்துள்ளார். இப்படத்தின் கடைசி ஷூட்டிங் கேரளாவின் அதிராபள்ளி நீர்வீழ்ச்சியில் படமாக்கப்பட்டது.

இதில் கேரள பாரம்பரிய உடையில் பல பெண்கள் அவர்களோடு இருந்த புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது. எல்லோரும் அந்த ஜோடியுடன் புகைப்படம் எடுத்து மகிழ்ந்துள்ளார்கள். படத்தில் அவர்கள் சம்மந்தப்பட்ட காட்சியும் இருக்கிறதாம்.