பிரித்தானிய நாட்டில் வசித்து வரும் பெண்மணி சார்லெட் வெட் (22). இவர் காவல் துறை அதிகாரிகளிடம் தனது 12 வயதாக இருக்கும் சமயத்தில் தனது வாழ்வில் நடந்த கோர சம்பவம் பற்றி காவல் துறையினரிடம் தெரிவித்துள்ளார்.
இவருடைய குழந்தை பருவ வயதில் இவர்களின் இல்லத்தில் இருந்து சுமார் 200 மைல்கள் தொலைவில் இவருடைய தாத்தா ரேமண்ட் ஹாட்ஜாஸ் (73) உள்ள ஊரில் வசித்து வந்துள்ளார். இவர் வாரத்திற்கு ஒரு முறை இவர்களின் இல்லத்திற்கு வரும் வழக்கத்தை வைத்துள்ளார்.
அந்த நேரத்தில், சார்லெட்டின் குடும்பத்தார் சார்லெட் மற்றும் அவரது சகோதரரை தாத்தாவிடம் கவனிக்க விட்டுவிட்டு பணிக்கு சென்று வரும் வழக்கத்தை வைத்துள்ளனர். இந்த நேரத்தில் தனது வக்கிர புத்தியை தாத்தா உபயோகம் செய்து கொள்ள வைத்துள்ளார்.
சிறுமிக்கு சுமார் 6 வயதாக இருக்கும் சமயத்திலேயே அவரின் சகோதரரை கொலை செய்து விடுவதாக மிரட்டி வலுக்கட்டாயமாக பலவந்தப்படுத்தி பாலியல் பலாத்காரம் செய்து வந்துள்ளார். மேலும், இது குறித்து யாரிடமும் கூறினால் கண்டிப்பாக கொலை செய்து விடுவேன் என்று கூறியுள்ளார்.
சிறுமிக்கு சுமார் 6 வயதாக இருக்கும் சமயத்திலேயே அவரின் சகோதரரை கொலை செய்து விடுவதாக மிரட்டி வலுக்கட்டாயமாக பலவந்தப்படுத்தி பாலியல் பலாத்காரம் செய்து வந்துள்ளார். மேலும், இது குறித்து யாரிடமும் கூறினால் கண்டிப்பாக கொலை செய்து விடுவேன் என்று கூறியுள்ளார்.
இதனால் பயந்து போன சிறுமி யாரிடமும் கூறாமல் இருந்து வந்த நிலையில், அடிக்கடி இதனை உபயோகப்படுத்தி சிறுமியை சீரழிக்க துவங்கியுள்ளார். மேலும், இந்த காட்சிகளை பதிவு செய்தும் மிரட்டி வந்துள்ளார். இந்த சூழ்நிலையில், சிறுமிக்கு மாதவிடாய் ஏற்படாமல் இருந்து வந்த நிலையில், மருத்துவமனைக்கு செல்ல சிறுமியின் தாயார் முடிவெடுத்துள்ளார்.
இதனை தன்னை சீரழித்த கொடூரனிடம் தெரிவித்ததை அடுத்து, கொடூரன் தனது கொடூர புத்தியை கட்டவிழ்த்து விட்டுள்ளான். சிறுமிக்கு கருக்கலைப்பு செய்வதற்கு துணி மாட்டுவதற்கு பயன்படுத்தப்படும் கொக்கியின் மூலமாக கொடூர முறையில் கருக்கலைப்பு செய்துள்ளான். இந்த நேரத்தில் ஏற்பட்ட வலியால் சிறுமி கதறி துடித்து போராடிக்கொண்டு இருந்த நிலையில் அத்துமீறியுள்ளான்.
நரக வேதனையை அனுபவித்து வந்த சிறுமி தனக்கு நடக்கும் அநீதியை பொறுக்க இயலாமல், காவல் நிலையத்தில் கடந்த 2016 ம் வருடத்தில் புகார் அளித்துள்ளார். இவரின் புகாரை ஏற்ற காவல் துறையினர் இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு, நீதிமன்றத்தில் இந்த வழக்கு தொடர்பான விசாரணை நடைபெற்று வந்த நிலையில், இந்த வழக்கை விசாரணை செய்த நீதிபதிகள் சுமார் 25 வருடங்கள் சிறை தண்டனை அறிவித்து உத்தரவிட்டனர்.