காதலி இறந்த அதிர்ச்சியில் பொலிஸ்காரர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல்லை சேர்ந்த ஸ்டீபன் நெல்சன் (24), திருச்சி காவலர் பயிற்சி பள்ளியில் பொலிஸாராக பயிற்சி பெற்று வருகிறார்.
இவர் கும்பகோணத்தை சேர்ந்த தன்னுடைய அத்தை மகளை காதலித்து வந்துள்ளார். கடந்த சில தினங்களுக்கு முன்பு பெற்றோருடன் அத்தை வீட்டிற்கு சென்ற நெல்சன், திருமணத்திற்கு பெண் கேட்டுள்ளார்.
ஆனால் அதற்கு அவர்கள் மறுப்பு தெரிவித்துள்ளார். இதனால் மனமுடைந்த நெல்சனின் காதலி கடந்த வாரம் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
அன்றிலிருந்தே நெல்சன் சோகமாகவே இருந்து வந்திருக்கிறார். விடுமுறை எடுத்துக்கொண்டு திருச்சியிலிருந்து, திண்டுக்கல்லிற்கு வந்த நெல்சன் வீட்டில் யாருடனும் பேசாமல் அமைதியாகவே இருந்துள்ளார்.
இந்த நிலையில் வெளியில் சென்றுவிட்டு வருவதா கூறி, வீட்டிலிருந்து வெளியேறியுள்ளார். ஆனால் அடுத்த சில நிமிடங்களில் அப்பகுதி வழியாக வந்த ரயிலின் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டுள்ளார். இந்த சம்பவம் அறிந்து விரைந்து வந்த பொலிஸார் நெல்சனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்