அட்லி இயக்கத்தில் விஜய் நடித்து வரும் விஜய் 63 படத்திற்கு பாடல்கள் எழுதி வருபவர் விவேக். இப்படத்திலும் நிச்சயம் ஹிட் கொடுக்க வைப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
மெர்சல் படத்தில் ஆளப்போறான் தமிழன் என சூப்பர் ஹிட் கொடுத்தவர் விவேக். அதனை தொடர்ந்து சர்கார் படத்தில் ஒரு விரல் புரட்சி பாடல் ஹிட் கொடுத்தார். இது மட்டுமல்ல ரஜினியுடன் பேட்ட படத்தை தொடர்ந்து, தற்போது தர்பார் படத்திலும் பணியாற்றி வருகிறார்.
அவருக்கு இன்று பிறந்தநாள். அனைவரும் வாழ்த்துக்கள் சொல்லி வருகிறார்கள். சினிஉலகமும் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறது.