இந்த பழத்த பார்த்திருக்கீங்களா? சாப்பிட்ருக்கீங்களா?

லகோட்டுப் பழம் என்பது ஒரு அரிய வகை பழமாகும். பொதுவாக சந்தைகளில் பெருமளவில் இந்த பழம் கிடைப்பதில்லை. ஆனால் இதன் ஊட்டச்சத்து மதிப்பு மிக அதிகம். மற்ற பழங்களைப் போல், இந்தப் பழத்தையும் சாலடில் கலந்து இந்த பழத்தின் சுவையை ருசித்து மகிழலாம்.

நோயெதிர்ப்பு மண்டலத்தை ஊக்குவிப்பது, அஜீரணத்தைத் தடுப்பது, உயர் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்துவது, புற்று நோய் அபாயத்தைத் தடுப்பது, சுவாச ஆரோக்கியத்திற்கு ஆதாரவாக இருப்பது, கொலஸ்ட்ரால் அளவை சமநிலையில் வைப்பது, எலும்புகளை வலிமையாக்குவது, இரத்த ஓட்டத்தை ஊக்குவிப்பது, நீரிழிவு பாதிப்பை நிர்வகிப்பது, ஆரோக்கியமான கண் பார்வையை நிர்வகிப்பது, அழற்சிக்கு சிகிச்சை அளிப்பது போன்றவை லகோட்டுப் பழத்தின் ஆரோக்கிய நன்மைகளாகும்.

இந்த லகோட்டுப் பழத்தை தொடர்ந்து உங்கள் உணவில் இணைத்துக் கொள்வதால் உங்கள் நோயெதிர்ப்பு மண்டலம், செரிமான மண்டலம், சுவாச மண்டலம் போன்றவற்றிற்கு சிறந்த நன்மைகள் கிடைக்கின்றன. கண் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும் ஒரு இயற்கை ஆதாரமாக இந்த பழம் விளங்குகிறது.

லகோட்டுப் பழம் என்றால் என்ன?
இந்த லகோட்டுப் பழம் சீனாவைச் சேர்ந்தது. உருண்டை வடிவத்தில் இருக்கும் இந்த பழம், அடர் ஆரஞ்சு நிறத்தைக் கொண்டதாகும். குளிர்ச்சியான பிரதேசங்களில் குறிப்பாக மலைகளில் இந்த பழம் அதிகமாக விளையும். ஹிமாலய மலையிலும் இந்த பழத்தினை நாம் காண முடியும். இந்த மரம் குளிர்காலத்தில் பூ பூத்து, மற்ற காலங்களில் கனியைத் தரும் என்பது வியப்பைத் தரும் ஒரு செய்தியாகும். இந்த மரத்தின் இலைகள் கூட ஊட்டச்சத்து மிகுந்தவை. இதன் ஊட்டச்சத்துகளை நீங்கள் பெற்றுக் கொள்ள, இந்த இலைகள் கொண்டு தேநீர் தயாரித்துப் பருகலாம்.

நோயெதிர்ப்பு சக்தி
உங்கள் நோயெதிர்ப்பு மண்டலம் விரைவாக செயல்பட வைட்டமின் சி சத்து ஒரு மிக முக்கிய ஊட்டச்சத்தாகும். இது ஒரு சிறந்த அன்டி ஆக்சிடென்ட்டாக செயல் புரிந்து , நாட்பட்ட நோய்கள் தொடர்பான அபாயத்தைப் போக்குகிறது. லகோட்டுப் பழத்தில் மிக அதிக வைட்டமின் சி சத்து உள்ளது. இந்த பழத்தில் அதிக அளவு வைட்டமின் சி இருப்பது மட்டுமல்ல, உங்கள் நோயெதிர்ப்பு செயல்பாடுகளையும் வலிமையாக்குகிறது. ஆகவே, லகோட்டு பழம் உங்கள் நோயெதிர்ப்பு மண்டலம் பலவீனமாகாமல் தடுக்கும் ஒரு இயற்கை ஆதாரமாக விளங்குகிறது.

அஜீரணத்தைத் தடுக்க
உடல் ஆரோக்கியத்திற்கு கேடு விளைவிக்கும் செயல்பாடுகளில் அஜீரணமும் ஒன்றாகும். பலருக்கும் அஜீரணம் காரணமாக குமட்டல் மற்றும் வாந்தி உண்டாகலாம். வயிறு தொடர்பான தொந்தரவுகளுக்கு ஒரு பாதுகாப்பான தேர்வாக உணவு நார்ச்சத்தைப் பரிந்துரைக்கின்றனர் ஊட்டச்சத்து நிபுணர்கள். இதற்கு ஒரு சிறந்த ஆதாரமாக விளங்குவது லகோட்டுப் பழம்.

உணவு நார்சத்து அதிகமாக இருக்கும் லகோட்டு பழம், வயிற்றுப்போக்கை போக்குவதில் சிறந்த சிகிச்சை அளிக்கிறது. அசாதாரமான குடல் இயக்கத்தைக் கட்டுப்படுத்தி, வயிறு வீக்கம், வலி மற்றும் இதர கோளாறுகளைப் போக்க உதவுகிறது. குடல் அழற்சி போன்ற பாதிப்புகளுடன் போராட இந்த நார்சத்து உதவுகிறது. ஆகவே செரிமானம் தொடர்பான கோளாறுகளுக்கு லகோட்டுப் பழத்தை நீங்கள் எடுத்துக் கொள்ளலாம்.

உயர் இரத்த அழுத்தத்திற்கு
உயர் இரத்த அழுத்தம், இதய ஆரோக்கியத்தை பாதிக்கிறது. இந்த பாதிப்பு எந்த வயதிலும் ஏற்படலாம். ஆகவே இதய ஆரோக்கியம் தொடர்பான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வது நல்லது. உயர்ந்த அளவு இரத்த அழுத்தத்தை சமநிலைப் படுத்த பொட்டாசியம் சிறந்த ஆதாரமாக விளங்குவதாக பல்வேறு ஆய்வுகள் குறிப்பிடுகின்றன.

லகோட்டுப் பழத்தில் இருந்து மிக அதிக பொட்டாசியம் சத்து பெற முடியும். தமனிகளிலும், இரத்தக் குழாய்களிலும் ஏற்படும் அழுத்தத்தை, இந்த கனிமம் போக்குகிறது. இதயம் எந்த ஒரு தடையும் இல்லாமல் பம்ப் செய்வதற்கு ஏற்ற விதத்தில் இதயத்தைப் பாதுகாத்து, வேறு தொந்தரவுகள் ஏற்படாமல் தடுக்க பொட்டாசியம் உதவுகிறது.

புற்றுநோய்க்கு
புற்று நோய் அணுக்கள் உண்டாவதற்கு ஃப்ரீ ரேடிகல் என்பவை காரணமாக உள்ளன. இதனைத் தடுக்க அன்டி ஆக்சிடென்ட் அதிகம் உள்ள உணவை உட்கொள்வது அவசியம் என்று மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். லகோட்டுப் பழம் போன்ற பழ வகை மற்றும் ஆர்கானிக் காய்கறிகளில் அன்டி ஆக்சிடென்ட் அதிக அளவில் உள்ளன.

ப்ரீ ராடிகேல்களை சமநிலைப்படுத்தும் செயல்பாடுகளில் அன்டி ஆக்சிடென்ட்கள் சிறப்பாக செயல்பட்டு, நாட்பட்ட வியாதிகளான வாய் புற்று நோய் மற்றும் நுரையீரல் புற்று நோய் போன்றவை உண்டாகும் வாய்ப்பைக் குறைக்க உதவுகின்றன.

சுவாச ஆரோக்கியத்திற்கு
லகோட்டுப் பழம் மட்டுமல்ல அதன் தேநீரும் பல்வேறு ஊட்டச்சத்துகளின் ஆதாரமாக விளங்குகின்றன. லகோட்டு தேநீர், ஒரு சிறப்பான சளி நீக்க மருந்தாக செயல்பட்டு சுவாச மண்டலம் தொடர்பான தொந்தரவுகளைப் போக்க உதவுகிறது. சளி மற்றும் கோழை வெளியேற்றத்தில் இந்த தேநீர் இயற்கை முறையில் செயல்புரிந்து கிருமிகளை அழிக்கிறது. தொடர்ச்சியான இருமல் மற்றும் மூச்சுத் திணறல் போன்ற பாதிப்புகள் இருந்தால், வீட்டுத் தீர்வுகளை முயற்சிப்பதுடன் மருத்துவரை அணுகுவதும் நல்ல பலனைத் தரும்.

உயர் கொலஸ்ட்ரால்
உயர் கொலஸ்ட்ரால் அளவை சமநிலைப் படுத்த ஒரு சுவை மிகுந்த ஆதாரமாக விளங்குவது லகோட்டுப் பழம். பொட்டாசியம், ஜின்க், மங்கனீஸ் போன்ற கனிமங்கள் இந்த செயல்பாட்டை சிறந்த முறையில் செய்வதாக நிரூபிக்கப்பட்டுள்ளது. இந்த அத்தியாவசிய கனிமங்கள் லகோட்டுப் பழம் அல்லது லகோட்டுத் தேநீரில் காணப்படுகிறது. இருப்பினும், இந்த செய்தி குறித்த பல ஆய்வுகள் நடந்தவண்ணம் உள்ளன.

எலும்புகளை வலிமையாக்க
வயது முதிர்ந்த பெண்களுக்கு எலும்பு அடர்த்தி மற்றவர்களை ஒப்பிடும்போது குறைவாக இருக்கும். குறிப்பாக மெனோபாஸ் காலகட்டத்திற்கு பிறகு இது ஒரு வழக்கமான பிரச்சனையாக இருக்கும். லகோட்டுப் பழத்தில் காணப்படும் உயர்ந்த அளவு கனிமம் காரணமாக எலும்பு அடர்த்தி குறைவாக இருக்கும் உடல் பகுதிகளில் வலிமையை மீட்டுத் தர இந்த பழம் உதவுகிறது. இந்த சிறப்பான செயல்பாடுக்காகவே ஊட்டசத்து நிபுணர்கள் இந்த பழத்தைப் போற்றிப் பாராட்டுகின்றனர். இருப்பினும், மேலும் எலும்புகளில் சேதம் ஏற்படாமல் இருக்க மருத்துவரை அணுகி பரிசோதனை செய்து கொள்வது நல்லது.

இரத்த ஓட்டத்தை ஊக்குவிக்க
உங்கள் உடல் உறுப்புக்கள் சீராக செயல்பட, இரத்த ஓட்டம் சிறப்பாக இருப்பது அவசியம். உங்கள் உடலில் போதுமான அளவு இரும்பு சத்து இருப்பதால் சீரான இரத்த ஓட்டம் சாத்தியமாகிறது. ஹீமோக்ளோபினின் முக்கிய பகுதியாக இரும்பு சத்து இருப்பதால், சிவப்பு இரத்த அணுக்களின் வளர்ச்சிக்கு இது உதவுகிறது. சிவப்பு இரத்த அணுக்கள் எளிய முறையில் உடலுக்குள் பரிமாற்றப்படுவதால், இரத்த ஓட்டம் அதிகரிக்கிறது. இந்த இரும்பு சத்து லகோட்டுப் பழத்தில் மிக அதிக அளவு காணப்படுகிறது. உங்கள் உடலில் இரும்பு சத்து அதிகமாக இருப்பதால், இரத்த ஓட்டம் உறுதி செய்யப்பட்டு, உங்கள் ஆற்றல் மேம்படுகிறது.

நீரிழிவு நோயாளிகளுக்கு
நீரிழிவு நோயாளிகள் லகோட்டின் நன்மைகளைப் பெற இதன் தேநீரை சுவைத்து மகிழலாம். தொடர்ச்சியாக லகோட்டு தேநீர் பருகி வருவதால், சர்க்கரை மற்றும் க்ளுகோஸ் அளவு பராமரிக்கப்பட்டு, இரத்த ஓட்டத்தில், சர்க்கரை அளவு அதிகரிக்காமல் இருக்க உதவுகிறது.

டைப் 2 நீரிழிவுக்கு காரணமாக உள்ளவற்றை போக்க இந்த தேநீர் உதவுகிறது. லகோட்டு உண்மையில் புத்துணர்ச்சி அளிக்கும் ஒரு பழம், ஆனால், நீரிழிவு நோயாளிகள் இந்தத் தேநீரை தினசரி தங்கள் வழக்கத்தில் எடுத்துக் கொள்வதற்கு முன்னர் மருத்துவ ஆலோசனைப் பெறுவது நல்லது.

கண் பார்வையைப் பராமரிக்க
லகோட்டுப் பழத்தில் வைட்டமின் ஏ சத்து அதிக அளவில் காணப்படுவதால் , கண் பார்வையை அதிகரிக்கும் ஒரு பழமாக இருக்கிறது. கண் நோய்களை எதிர்க்கு ஒரு பாதுகாப்பு அரணாக இந்த வைடமின் சத்து உதவுகிறது . கண்புரை நோய், பசும்படலம் போன்ற கண் தொடர்பான பாதிப்புகளைத் தடுக்க உதவுகிறது. ஆகவே கண் தொடர்பான சேதங்களைத் தவிர்க்க லகோட்டுப் பழத்தை எடுத்துக் கொள்ளலாம்.

அழற்சிக்கு தீர்வு
லகோட்டில் வலி நிவாரணத் தன்மை மற்றும் அழற்சி எதிர்ப்பு தன்மை ஆகியவை உள்ளதாக ஊட்டச்சத்து நிபுணர்கள் கூறுகின்றனர். இதனால் பல்வேறு உடல் அழற்சி தொடர்பான காரணிகளை எதிர்த்து போராட இந்த பழம் உதவுகிறது. தொடர்ச்சியான இருமல் காரணமாக உண்டான மார்பு அழற்சியைப் போக்க சிறிதளவு லகோட்டுப் பழத்தை வாயில் போட்டு மெல்லலாம்.

மூட்டு அழற்சியைப் போக்க இந்த பழம் உதவுவதாகவும் அறியப்படுகிறது. ஆனால் இந்த அறிகுறிகள் சில அச்சுறுத்தும் நோய்களின் அறிகுறியாகவும் இருக்கலாம். எனவே, நீங்களாக மருந்து எடுத்துக் கொள்வதைத் தவிர்த்து, மருத்துவரிடம் சென்று பரிசோதிப்பது நல்லது.

உடலை ஃபிட்டாக வைக்க
லகோட்டுப் பழங்கள், பல்வேறு கனிமங்கள் மற்றும் வைட்டமின்களின் ஆதாரமாக விளங்குகின்றன. இந்த பழத்தை தொடர்ச்சியாக நீங்கள் உட்கொள்வதால், இந்த ஊட்டச்சத்துகள் உங்கள் உடலுக்குக் கிடைக்கின்றன. உங்கள் உடலின் வளர்சிதை மாற்றத்தை வலிமையாக்கும் விதத்தில் இவை செயல்பட்டு, உங்கள் உடலின் ஆற்றல் அளவை அதிகரிக்கச் செய்து, உங்கள் உடலை பிட்டாக வைக்க உதவுகிறது.

ஆரோக்கியமான சருமத்திற்கு
ஆரோக்கியமான பளபளப்பான சருமத்திற்கு வைடமின் சி மிகவும் அவசியம் ஆகும். சரும அணுக்களை சேதம் செய்யும் சாத்தியமான காரணிகளை எதிர்த்து போராட இவற்றில் உள்ள அன்டி ஆக்சிடென்ட்கள் உதவுகின்றன. லகோட்டுப் பழம் சாப்பிடுவதால், மிருதுவான பளபளப்பான சருமம் கிடைக்கப்பெறுகிறது.

முடிவுரை
லாகோட்டுப் பழத்தின் ஆரோக்கிய நன்மைகள் நம்ம ஆச்சர்யபடுத்தும் விதத்தில் உள்ளன. ஆகவே, இந்த பழத்தை உங்கள் தினசரி சாலடில் சேர்த்து அதன் ஊட்டச்சத்துகளைப் பெற்றிடுங்கள்.