‘பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தில் இணைந்த முக்கிய பிரபலம்

இயக்குநர் மணிரத்தினத்தின் இயக்கத்தில் பல முன்னணி நடிகர், நடிகைகளின் நடிப்பில் பிரமாண்டமாக ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படம் உருவாகவுள்ளது.

அந்தவகையில், ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தில் நடிப்பத்கு நாளுக்கு நாள் ஒவ்வொரு பிரபலங்கள் இணைந்து கொண்டுதான் இருக்கின்றார்கள்.

அந்தவகையில், இத்திரைப்படத்தில் 7 முறை தேசிய விருது பெற்ற பாடலாசிரியரும் கவிஞருமான வைரமுத்து இணைந்துள்ளார். மிகப்பெரிய வெற்றிக் கூட்டணியில் இத்திரைப்படம் தயாராகி வருகின்றது. சமீபத்தில் இத்திரைப்படத்தில் நடிகர் சத்யராஜ் இணைந்திருந்தார்.

மணிரத்தினம் தயாரிப்பில் 1992 ஆம் ஆண்டு வெளிவந்த ‘ரோஜா’ திரைப்படம் முதல் ‘செக்க சிவந்த வானம்’ வரை வைரமுத்து ஏ.ஆர்.ரஹ்மான் கூட்டணி தொடர்ந்து கொண்டிருக்கின்றது. இத்திரைப்படத்திலும் மீண்டும் இவர்களின் கூட்டணி தொடர்கின்றமை குறிப்பிடத்தக்கது.

இத்திரைப்படத்தில் பொன்னியின் செல்வனாக நடிகர் ஜெயம் ரவி, வந்தியந்தேவனாக கார்த்தி, பூங்குழலியாக நயன்தாரா, சுந்திரசோழனாக அமிதாப்பச்சன், ஆதித்த கரிகாலனாக விக்ரம், குந்தவையாக கீர்த்தி சுரேஷ் பெரிய பழுவேட்டரையராக மோகன் பாபுக்கு பதிலாக நடிகர் சத்யராஜ் ஆகியோர் நடிக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.