2010 ஆம் ஆண்டு பாடசாலை என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் இனியா. இதை தொடர்ந்து இப்போது, வாகை சூடவா போன்ற படங்களில் நடித்தார். வாகை சூடவா படத்தின் மூலம் விருதுகளையும் பெற்றார்.
அதன்பின் வாய்ப்புக்கள் இல்லாமல் ஈயோட்டிக் கொண்டிருந்தார். துணிக்கடை, நகைக்கடை திறப்பு விழாக்களில் கலந்துகொண்டு சம்பாதித்துக் கொண்டிருந்தார். யாழ்ப்பாணத்திலும் ஒரு துணிக்கடை திறப்பு விழாவிற்கு வந்திருந்தார்.
நீண்ட இடைவெளியின் பின் இப்பொழுது இன்னொரு படத்தில் நடிக்கிறார். ஓம் சினி வென்சர்ஸ் பட நிறுவனம் சார்பில் சாரதி சதீஷ் தயாரிப்பில், அறிமுக இயக்குனர் சாய் கிருஷ்ணா இயக்கத்தில் காபி என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
காபி திரைப்படத்தின் கதை, ஏழைக் குடும்பத்தில் பிறந்த பெண், கடினப்பட்டு தனது சகோதரனை படிக்க வைக்கிறார், சகோதரனின் படிப்பு முடிந்து சிரமம் தீர்கிறது என நினைக்கும்போது, ஒரு அதிர்ச்சி சம்பவம் நடைபெறுகிறது. அது என்ன சம்பவம், அதன் முடிவு எப்படி அமைகிறது என விறுவிறுப்பாக தயாரிக்கிறார்கள்.
இந்தப்படம், சமூக அவலங்களை தோலுரித்து காட்டும் என தெரிவித்துள்ளார் இயக்குனர் சாய் க்ரிஷ்.
இனியா எப்பொழுதும் குடும்பப் பாங்கான வேடங்களில்தான் இதுவரை நடித்துள்ளார். இந்தப்படத்தின் மூலம் கவர்ச்சிக் கோதாவில் குதித்துள்ளார்.
இதுவரை இல்லாத அளவிற்கு அம்மணியின் படு கவர்ச்சியான படமொன்றை வெளியிட்டுள்ளனர்.