வாந்தி எடுக்கும் போது குழந்தைகளோ பெரியவர்களோ வாயை மூடிக்கொள்வது பெரும் ஆபத்தை ஏற்படுத்துமாம். குறிப்பாக குழந்தைகளுக்கு இதை செய்யவே கூடாதாம்.
குழந்தைகள் வாந்தி எடுக்கும் போது வீட்டு பொருட்கள் வீணாகிவிடும் என்பதற்காக குழந்தை வாயை கை வைத்து மூடி வெளியில் கொண்டு செல்வார்கள்.
இவ்வாறு செய்தால் குழந்தைகளுக்கு மூச்சித்திணறல் ஏற்பட்டு சுவாச குழாயில் மூச்சிவிடும் பாதையை அடைத்து இறக்கும் வாய்ப்புள்ளதாக மருத்துவ விஞ்ஞானிகள் கூறுகிறார்கள்.
எனவே குழந்தைகள் வாந்தி எடுத்தால் இடம் பொருட்களை பார்க்காமல் உடனே எடுக்கவிடுவது குழந்தையின் ஆரோக்கியத்திற்கு நல்லதாக அமையும்.