மக்களவைத் தேர்தலின் இரண்டாம் கட்ட வாக்குப் பதிவு இன்று காலை தொடங்கியது.
சென்னை ஆழ்வார்பேட்டையில் மின்வெட்டு காரணமாக ஓட்டுப்பதிவு தாமதம் ஏற்பட்டது.
இங்குள்ள வாக்குச்சாவடியில், மக்கள் நீதி மய்யத் தலைவர் கமல் ஓட்டளிக்க முடியாமல் வரிசையில் காத்து நின்றார்.
பல்வேறு வாக்குச் சாவடிகளில் வாக்களிப்பு இயந்திரத்தில் உள்ள கோளாறு காரணமாக வாக்குப்பதிவு தாமதமாகத் தொடங்கியது. கோளாறை சரி செய்யும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.