ஆர்வத்துடன் வாக்களித்த அஜித்!

மக்களவைத் தேர்தலில் இரண்டாம் கட்ட வாக்குப் பதிவு இன்று காலை 7 மணிக்குத் தொடங்கியது.

பிரபலங்கள் பலரும் வரிசையில் நின்று தங்கள் வாக்குகளைப் பதிவு செய்து வருகின்றனர். நடிகர்கள் அஜித், விஜய் உள்ளிட்ட பலரும் ஆர்வத்துடன் வந்து தங்கள் வாக்குகளைப் பதிவு செய்தனர்.

நடிகர் அஜித்குமார் காலையே ஆர்வத்துடன் தனது மனைவி ஷாலினியுடன் வாக்குச் சாவடிக்கு வந்திருந்தார். தென் சென்னை மக்களவைத் தொகுதியில் வாக்களித்தார் அஜித்குமார்!

நடிகர் ரஜினிகாந்த், தனது படப்பிடிப்பில் இருந்து விடுபட்டு, இன்று வாக்களிப்பதற்காகவே சென்னைக்கு வந்தார். மத்திய சென்னை தொகுதியில் நடிகர் ரஜினி தனது வாக்கை செலுத்தினார்.

மத்திய சென்னை தொகுதியில் நடிகர் சிவக்குமார் தனது மகன்களும் நடிகர்களுமான சூர்யா, கார்த்தி ஆகியோருடன் வந்திருந்தார். சூர்யாவின் மனைவியும், நடிகையுமான ஜோதிகாவும் வந்து, குடும்பத்துடன் தங்கள் வாக்கைச் செலுத்தினர்.’

தென் சென்னையில் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தென்சென்னை தொகுதிக்கு உட்பட்ட பட்டினப்பாக்கத்தில் நடிகை குஷ்பு வாக்களித்தார். சாலிகிராமத்தில் நடிகர் விஜய் ஆண்டனி வாக்களித்தார்.