பிரபல நடிகையை செருப்பால் அடித்த இயக்குனர்…

ஜெயம் ரவி நடிப்பில் கடந்த 2008 ஆம் ஆண்டு வெளியான ‘தாம் தூம் ‘ படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு பரிட்சியமானவர் நடிகை கங்கனா சினிமா தமிழில் பெரிதாக பேசபடவில்லை என்றாலும் இந்தி திரையுலகில் தற்போதைய லேடி சூப்பர் ஸ்டாராக திகழ்ந்து வருகிறார்.

இந்தியில் 2006 ஆம் ஆண்டு வெளியான ‘கேங்ஸ்டர்’ திரைப்படத்தின் மூலம் திரையுலகில் கால் பதித்தார். அதன் பின்னர் இவர் நடித்த பல்வேறு படங்கள் ஹிட் அடிக்க தற்போது கதாநாயிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதாபத்திரத்தில் நடித்து வருகிறார்.

சமீபத்தில் பாலிவுட் நடிகை அலியாபத் நடிப்பில் வெளியான ‘கல்லிபாய்’ திரைப்படத்தில் அலியாபத்தின் நடிப்பு படு மோசமாக இருக்கிறது என்று கங்கனா கருத்து தெரிவித்திருந்தார். இதனால் மகேஷ் கங்கனா மகள் என்பதற்காக அலியா பத்திற்கு பலரும் ஆதரவாக பேசி வருகின்றனர்.

இந்த நிலையில் கங்கனாவின் அக்கா ரங்கோலி, மகேஷ் பத் குடும்பத்தை ட்விட்டரில் கடுமையாக விமர்சித்துள்ளார். அதில், Dhokha என்ற படத்தில் கங்கனா நடிக்க மறுத்ததற்கு மகேஷ் படத்தில் அவரை மோசமாக திட்டியதோடு செருப்பை அவர் மீது வீசினார். அதேபோல் அவர் நடித்த படத்தையே பார்க்க விடாமல் துரத்தினார் என்று பகீர் குற்றச்சாட்டை வைத்துள்ளார்.