இந்திய தூதரகத்திற்கு தெரிவிக்காமலேயே 2 இந்தியர்களுக்கு மரண தண்டனையை நிறைவேற்றியுள்ளது சவுதி அரேபிய அரசு.
பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்தவர்கள் என ஹர்ஜித் மற்றும் சத்விண்டர், இவர்கள் இருவரும் சவுதியில் வேலை செய்து வந்துள்ளனர். அப்போது பணத்தை கொள்ளையடிக்க திட்டமிட்டு மூன்று பேர் சேர்ந்த குழு செயலில் ஈடுபட்டு உள்ளது.
பின்னர் கொள்ளையடித்த பணத்தை பிரித்து பங்கிடும் போது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து ஹர்ஜீத் மற்றும் சத்விண்டர், இருவரும் சக இந்தியரான மற்றொருவரை கொலை செய்து உள்ளனர். பின்னர் இந்த தகவலை அடுத்து இவர்கள் இருவரையும் கைது செய்து மேற்கொண்ட விசாரணையில் கொலை செய்ததற்கான காரணமும், இருவரும் சேர்ந்து கொலை செய்ததும் தெரியவந்துள்ளது. பின்னர் சிறையில் அடைக்கப்பட்ட இவர்கள் இருவரையும் விடுவிக்கக் கோரி அவரது உறவினர்கள் பலமுறை மனுக்களை அளித்துள்ளனர்.
இருந்த போதிலும் கடந்த பிப்ரவரி 28 ஆம் தேதியன்று இரண்டு இந்தியர்களுக்கும் சவுதி அரசு மரண தண்டனையை நிறைவேற்றி உள்ளது. ஆனால் இதுவரை இது குறித்த விவரத்தை இந்திய தூதரக அதிகாரிகளிடம் தெரிவிக்காமல் இருந்துள்ளனர். இந்த விவகாரம் தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இதனையெல்லாம் மீறி, மற்றொரு விஷயம் என்னவென்றால் இந்தியாவில் சிறு பெண் பிள்ளைகளை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்தாலும், குற்றவாளிகளுக்கு சிறை தண்டனை மட்டுமே… அப்படியே மரணதண்டனை விதித்தாலும், பின்னர் இடைக்கால தடை விதிப்பது என சில பல காரணம் காட்டி மரண தண்டனை நிறுத்தி வைக்கப்படும். ஆனால் சவுதியில், கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டதற்கே அதுவும் இந்தியர்களை இந்திய தூதரகத்துக்கு கூட சொல்லாமல், மரண தண்டனையை கடந்த பிப்ரவரி மாதம் 28 ஆம் தேதி நிறைவேற்றி உள்ளது. இதெல்லாம் எவ்வளவு பெரிய அசிங்கம்..? என மக்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.