உங்கள் அன்பை காதலை வெளிப்படுத்த பெரிய விஷயங்களை செய்ய வேண்டும் என்ற அவசியம் கிடையாது. காதலில் சின்ன சின்ன விஷயங்கள் கூட அழகு தான். உங்கள் சிறு புன்னகையே போதும் உங்கள் காதலியை சந்தோஷப்படுத்த போதும். இப்படி சின்ன சின்ன ரொமாண்டிக் சீன்கள் தான் உங்கள் காதலுக்கு அழகு சேர்க்கும்.
விலையுயர்ந்த பொருட்கள், காஸ்ட்லி ட்ரிப் என்றெல்லாம் இல்லாமல் உங்கள் காதலிக்கு பிடித்த பூக்கள், ஓவியங்கள், உங்கள் சந்திப்பு, அன்பான காதல் கடிதம் இவைகளே போதும்.
உங்கள் காதலை வெளிப்படுத்த. நீங்கள் செய்யும் இந்த சின்ன விஷயங்களே உங்கள் காதல் உறவை வலுப்படுத்தி விடும். இதுவே உங்கள் இருவருக்கான நெருக்கத்தை அதிகரித்து விடும். இதற்காக நீங்கள் நிறைய மெனக்கெடல்களை செய்ய வேண்டாம்.
கீழ்க்கண்ட சின்ன சின்ன விஷயங்களை தினமும் செய்தாலே போதும் உங்கள் காதல் உறவு மகிழ்வாகும்.
அழகான மடல்
உங்கள் அன்பானவர்க்கு எழுதும் மடல் மிகவும் சிறப்பு வாய்ந்தது. உங்களுடைய உணர்வுகளை காதலை சிறு மடல்களாக அல்லது கவிதைகளாக எழுதி கொடுக்கலாம்.
இதை உங்கள் துணை பழங்கும் இடத்தை வைத்து ஒரு சர்ப்ரைஸ் கொடுக்கலாம். கண்டிப்பாக நீங்கள் எழுதிய வார்த்தைகள் உங்கள் துணைக்கு ஸ்பெஷல் தான். அழகான ஓவியம், ஹார்ட்டின் சிம்பிள் போட்டு அழகு படுத்தலாம்.
உங்கள் துணைக்கு உதவுங்கள்
உங்கள் துணை சமையலில் கஷ்டப்பட்டால் அவர்க்கு உதவி செய்யலாம். அவர் கஷ்டப்படும் வேளைகளில் உதவி செய்வது உங்கள் அன்பை அவர்க்கு காட்டும்.
உங்களுக்கு சமையலில் விருப்பம் இல்லை என்றால் கூட மற்ற வேலைகளில் உதவலாம். அவளுடன் பேசுங்கள், சிரியுங்கள் அவர்களது வேலையை குறையுங்கள். இது உங்கள் இருவருக்கிடையே உள்ள அன்பை காட்டும்.
மனநிலையை மாற்றுங்கள்
உங்கள் துணையின் மனநிலை சரியில்லை என்றாலோ அல்லது சோகமாக அவர் இருந்தாலோ அந்த சூழலை மாற்றுங்கள். தினமும் விடுமுறை இல்லாமல் வேலை பார்க்கும் துணைக்கு ஒரு நாள் விடுப்பு கொடுக்கலாம்.
அவர் மனநிலையை சரி செய்ய சிறிது ஓய்வு கண்டிப்பாக தேவை. அவர்களை கூட்டிச் சென்று அவர்களுக்கு பிடித்த பூக்கள், டிசர்ட் மற்றும் ஐஸ் கிரீம் வாங்கி கொடுத்து அவர்களை மகிழ்விக்கலாம்.
இப்படி நீங்கள் அன்பாக அணுகுவது அவர்கள் மனநிலையை மாற்றி விடும். அப்புறம் நீங்களும் அவர்களும் சந்தோஷமாக வாழலாம்.
இசையை அன்பளியுங்கள்
பாடல்கள் நம் உணர்வுகளை வெளிப்படுத்தும் விஷயமாக கூறப்படுகிறது. உங்கள் அன்பானவருக்கு பிடித்தமான பாடல்களையோ அல்லது அவருக்கு பிடித்தமான வரிகளையோ அன்பளியுங்கள்.
ஏன் பாட்டு பாடி கூட நீங்கள் அவர்களை கரக்ட் பண்ணலாம். கண்டிப்பாக நீங்கள் பாடிய பாடலை நாள் முழுவதும் மறக்காமல் அவர்கள் திரும்ப திரும்ப கேட்டுக் கொண்டே இருப்பார்கள்.
சமூக ஊடகங்களில் உங்கள் காதல்
இன்றைய காலகட்டத்தில் எல்லாரும் பார்க்கும் விதமாக காதலைச் சொல்வது தான் ட்ரெண்ட்டாக உள்ளது. அதற்கு சமூக வலைத்தளங்களும் உதவியாக இருக்கிறது.
உங்கள் இருவர் புகைப்படங்களை எடுத்து அழகான ரொமாண்டிக் கவிதைகளுடன் போஸ்ட் செய்து கூட உங்கள் காதலை வெளிப்படுத்தலாம். ரொமாண்டிக் மிமீம்ஸ், ரொமாண்டிக் கவிதைகள் கூட போட்டு அசத்தலாம்.
அன்பை வெளிப்படுத்துங்கள்
ஒரு ஆரோக்கியமான உறவு என்பதில் இருவர் மனதும் முக்கியம். இருவரும் இணைந்து அன்பை பரிமாறிக் கொண்டால் மட்டுமே உறவு பலப்படும். உங்கள் துணை உங்களுக்காக நிறைய செய்யும் போது அவரது காதலை உணருங்கள்.
நீங்களும் உங்கள் அன்பை வெளிப்படுத்த முன் வாருங்கள். கண்டிப்பாக எதிர்ப்பார்ப்புகள் என்பது எல்லோருக்கும் இருக்கும்.
சலிப்பின்மை
இதில் ஒருவர் மட்டுமே நிறைவேற்றும் போது வாழ்க்கை சலிப்படைய வாய்ப்புள்ளது. எதையும் தேக்கி வைப்பதில் மதிப்பில்லை. கொடுப்பதில் தான் அதிகம். அன்பும் காதலும் அப்படித்தான்.
இனியாவது உங்கள் மனசு முழுவதும் நிரம்பி கிடக்கும் காதலை வெளிப்படுத்துங்கள். உங்கள் அன்பான துணை காத்துக் கொண்டு இருக்கிறார் உங்களுக்காக.