பிரித்தானியாவில் இளம் வயதினர் எந்த வயதில் தங்கள் கன்னித்தன்மையை இழக்கின்றனர்?

பிரித்தானியாவில் இளம் வயதினர் எப்போது தங்கள் கன்னித்தன்மையை இழக்கின்றனர் என்று ஆய்வு செய்ததில் பல நம்ப முடியாத தகவல்கள் கிடைத்துள்ளன.

பிரித்தானியாவில் பாலியல் உறவில் ஈடுபட குறைந்தது ஒருவர் பதினாறு வயதையாவது தாண்டிருக்க வேண்டும்.

ஆனால் சமீபத்தில் வெளியாகியுள்ள பாலியல் அணுகுமுறை மற்றும் வாழ்வியல் முறை குறித்த தேசிய ஆராய்ச்சி, மக்களில் பெரும்பாலானோர் 16 வயதை தாண்டிவிட்டாலும் பாலியல் உறவுக்கு தயாராகாமல் இருக்கின்றனர் என்பது தெரியவந்துள்ளது.

பிரித்தானியாவில் ஒவ்வொரு பத்தாண்டிற்கு ஒரு முறை பாலியல் நடத்தை எப்படி இருக்கிறது என்பது குறித்து வெளிவரும் அறிக்கை தான் இது.

லண்டன் ஸ்கூல் ஆப் ஹைஜீன் மற்றும் ட்ராபிக்கல் மெடிசின் ஆராய்ச்சியாளர்கள் இளம் வயதினரில் உள்ள 3000 பேரிடம் ஆய்வு ஒன்றை நடத்தியுள்ளது.

இளம் பெண்களில் 40 சதவீதத்தினரும், இளம் ஆண்களில் 26 சதவீதத்தினரும் தங்களது முதல் பாலியல் அனுபவம் சரியான நேரத்தில் நடக்கவில்லை என்று நினைப்பதாக இந்த ஆய்வில் தெரிவித்துள்ளனர்.

சற்று ஆழமாக அவர்களிடம் பேசிய போது, பலர் கன்னித்தன்மையை இழக்க இன்னும் சற்று காலம் காத்திருக்க விரும்பியதாகவும், சிலர் இன்னும் விரைவிலேயே கன்னித்தன்மையை இழக்க விரும்பியதாகவும் கூறியுள்ளனர்.

பெரும்பாலானவர்கள் 18 வயதில் பாலியல் உறவு அனுபவத்தை பெற்றிருக்கிறார்கள். பாதி பேர் 17 வயதில் முதல் முறையாக பாலியல் உறவில் ஈடுபட்டுள்ளார்கள். மூன்றில் ஒருவர் பதினாறு வயதுக்கும் முன்னதாகவே பாலியல் உறவில் ஈடுபட்டுள்ளனர்.

பாலியல் உறவில் ஈடுபட தனது இணையுடன் சம்மதம் பெற்று ஈடுபட்டார்களா என்பதையும் இந்த ஆய்வு ஆராய்ந்தது.

அதாவது, முதன் முறையாக பாலியல் உறவில் ஈடுபடுவதற்கு முன்னதாக, தனது இணையிடம் பாலியல் உறவில் ஈடுபட இருவரும் குடி போதையில் இல்லாத நிலையில் பரஸ்பரம் சம்மதம் பெற்றுக்கொண்டார்களா அல்லது போதையின் உச்சத்தில் பாலியல் உறவுக்கு இணங்கினார்களா என்பதும் இந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.

பெண்களில் பாதி பேர் இந்த ஆய்வில் தோல்வி அடைந்திருக்கிறார்கள். பத்தில் நான்கு ஆண்களுக்கும் இதில் தோல்வி கிடைத்துள்ளது.

ஐந்தில் ஒரு பெண் மற்றும் பத்தில் ஒரு இளைஞர் முதன் முறையாக பாலியல் உறவில் ஈடுபடும்போது இருவருக்கும் ஒரே நேரத்தில் விருப்பம் வரவில்லை என்று கூறியுள்ளனர். சிலர் பாலியல் உறவில் ஈடுபட அழுத்தங்களை சந்தித்ததாக தெரிவித்துள்ளனர்.

இந்த ஆராய்ச்சியின் நிறுவனர் பேராசிரியர் கேய் வெல்லிங்ஸ் இது குறித்து கூறுகையில், பாலியல் உறவில் ஈடுபடுவதற்கு வயதை மட்டும் வைத்து ஒருவர் பாலியல் உறவில் ஆர்வமாக ஈடுபட தயாராவார் என்பதை சொல்ல முடியாது.

ஒவ்வொரு இளைஞர், இளம் பெண்ணும் வித்தியாசமானவர்கள். சிலர் 15 வயதிலேயே பாலியல் உறவுக்கு தயாராகலாம். சிலர் 18 வயதிலும் பாலியல் உறவுக்கு தயாராகாமல் போகலாம் என்று கூறியுள்ளார்.