பெண்களே உங்கள் பொடுகு 3நாட்களில் போக்கும் இலகுவான டிப்ஸ்

தற் காலத்தில் நிறைய பேருக்கு தலையில் பொடுகு வருவது பெரிய தலை இடியாக மாறி உள்ளது..இந்த பொடுகு தொல்லையால் நீண்ட காலமாக அவதிப்படுவோருக்காக இந்த பதிவை எழுதியுள்ளோம்..
தலையில் இருப்பது பொடுகுதானே இருந்து விட்டு போகட்டும் என விட்டு விட முடியாது..ஏன் எனில் இந்த பொடுகு முதலாவதாக செய்யும் வேலை முடியை உதிர செய்வது..அடுத்து தலையில் ஒரு விதமான அரிப்பையும் ஏற்படுத்துகின்றது..

இதற்கான தீர்வாக பலபேர் ஆன்டி dandruff shampoo களினை பயன்படுத்துகின்றனர்.இவ்வாறான ஷாம்ப்போ கள் பொடுகை தற்காலிகமாக இல்லாமல் செய்கின்றன ..ஆனால் நீங்கள் ஷாம்ப்போ இனை பயன்படுத்துவதை
நிறுத்திய உடனே பொடுகு மீண்டும் வந்து விடுகிறது.அது மட்டும் இல்லாமல் இந்த வகையான ஷாம்ப்போ இல் நிறைய இரசாயன பொருட்கள் இருப்பதால் அவை தலைமுடிக்கு பாரிய பாதிப்புகளை ஏற்படுத்திவிடும்..

இந்த பொடுகினை 3 நாட்களில் வீட்டு மருத்துவத்தினை பயன்படுத்தி நிரந்தரமாக இல்லாமல் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

இதற்கு நீங்கள் வேப்பம் பூ மற்றும் வேப்பம் இலை ஆகியவற்றை எடுத்து கொள்ளுங்கள்..பொதுவாக நம் சுற்று சூழலிலே வேப்பம் மரம் இருக்கும்..நகர் பகுதிகளில் வாழ்பவர்களுக்கு இவற்றை சேகரிப்பது கடினமாக இருக்கலாம்..அப்பிடியானவர்கள் நன்கு காய வைத்த வேப்பம பூ மற்றும் வேப்பம் இலை என்பன நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும்,,அவற்றை பயன்படுத்தி கொள்ளலாம்

வேப்பம் பூ

மரங்களில் இருந்து வேப்பம் பூமற்றும் இலையை எடுத்தவர்கள் அதில் ஈரப்பதன் இல்லாதவாறு நன்கு வெயிலில் காய வைத்த பின்னர் அரை லிட்டர் தேங்காய் எண்ணையில் இவற்றை போட்டு மிதமான சூட்டில் 10 நிமிடம் காய்ச்சி எடுத்து கொள்ளுங்கள் ..

இதனை தொடர்ந்து 3 நாட்களுக்கு காலையில் எழுந்தவுடன் தலையின் முடியின் அடிப்பாகம் வரை நன்கு படும் அளவிற்கு தலையில் பூசி மசாஜ் செய்து கொள்ளுங்கள்.. இவ்வாறு 3 நாட்களுக்கு செய்த பின்னர்
3வது நாள் மதியம் வழமையாக நீங்கள் தலை குளிப்பதை போல் நன்கு தலைகுளியுங்கள்…

வேப்பம் எண்ணெய்

இவ்வாறு செய்வதன் மூலம் 90 வீதமான பொடுகினை இல்லாமல் செய்துவிடமுடியும்..இந்த முறையை செய்ய கடினமாக இருந்தால் பொதுவாக ஆயுர்வேத கடைகளில் வேப்பம் எண்ணெய் கிடைக்கும்..இதனை வாங்கி சரியான சம அளவுகளில் தேங்காய் எண்ணெய் மற்றும் வேப்பம் எண்ணெய் என்பவற்றை கலந்து முன்பு குறிப்பிட்டது போல் தொடர்ந்து 3 நாட்களுக்கு செய்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்….