கிளிநொச்சி- மலையாளபுரம் கிராமத்தில் உள்ள செஞ்சொலை காணியில் குடியிருக்கும் மக்கள் நேற்று இரவு பெய்த மழையினால் பாதிக்கப்பட்டு அருகில் உள்ள பாடசாலையில் தஞ்சம் புகுந்துள்ளனா்.
செஞ்சோலையில் வளா்ந்த பிள்ளைகள் செஞ்சோலை வளாகத்தில் குடியேறி வாழ்ந்துவரும் நிலையில் அந்த காணியை அபகாிப்பதற்கு சிலா் முயற்சித்துக் கொண்டிருக்கின்றனா்.
இதனால் குடியிருக்கும் மக்களுக்கு இதுவரை வீட்டுத்திட்டம் வழங்கப்படவில்லை. மக்கள் தறப்பாள் கொட்டில்களிலேயே வாழ்ந்து கொண்டிருக்கின்றனா்.
இந்நிலையில் நேற்று இரவு பெய்த மழையினால் மக்களின் தறப்பாள் கூடாரங்களுக்குள் வெள்ளம் புகுந்து நிலையில் இரவு படுத்துறங்க முடியாத நிலையில் மக்கள் தவித்துள்ளனா்.
இதனையடுத்து தமிழ்தேசிய கூட்டமைப்பின் ஆதரவாளா்கள் சிலா் இணைந்து, பெண்கள், சிறுவா் உள்ளிட்டவா்களை உடனடியாக மீட்டு,
அருகில் உள்ள அன்னை சாரதா வித்தியாலயத்தில் தங்கவைத்துள்ளனா். இந்நிலையில் இனிமேலாவது பொறுப்புவாய்ந்தவா்கள் நடவடிக்கை எடுத்து அந்த மக்களுக்கு காணிகளை பெற்றுக் கொடுக்கவேண்டும்.