சிவனொளிபாதமலையில் இலட்சக்கணக்கான யாத்ரீகர்கள்

தமிழ், சிங்கள சித்திரை புத்தாண்டின் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு சிவனொளிபாத மலையை தர்சிக்க சுமார் இரண்டு இலச்சத்திற்கும் அதிகமான யாத்ரீகர்கள் வருகை தந்துள்ளனர்.

இந்த நிலையில் வருகைத் தருபவர்களுக்கான வசதிகள் ஏற்பாடு செய்து கொடுக்கப்பட்டுள்ளதாக, காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.

அத்துடன் சிவனொளிபாத மலையை அண்மித்த, வீதிகளில் கடும் வாகன நெரிசல் நிலவுவதாகவும், காவற்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.