விஷம நோக்கத்துடன் வருபவர்களைச் சமாளிக்க தற்காப்பு வித்தைகளை கற்று வைத்திருப்பது பெண்களுக்கு நல்ல பாதுகாப்பை வழங்கும். விழிப்புணர்வு, பாதுகாப்பு ஏற்பாடுகளே உங்கள் தனிமையை கவலையற்றதாக்கும்.
வீடு புகுந்து குற்றங்களில் ஈடுபடுபவர்கள் பெரும்பாலும் கொடிய ஆயுதங்களுடன் வருவதாக கணிக்கப்படுகிறது. நம் நாட்டிலும் இதுபோன்ற குற்றங்கள் ஆங்காங்கே நடக்கின்றன. இத்தகைய ஆபத்துகளில் இருந்து தங்களை பாதுகாக்க தனிமையில் இருக்கும் இல்லத்தரசிகள், மாணவிகள் நிச்சயம் பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் இருபது அவசியம். உங்கள் தனிமையை யாரோ கவனிக்கிறார்கள் என்பதுதான் இதுபோன்ற குற்றங்களின் பின்னணி. எனவே விழிப்புணர்வுடன் இருங்கள், ரகசியத்தை கசியவிடாதீர்கள்.
வீட்டுக்கு அருகில் முன்பின் தெரியாதவர்கள் நடமாடினாலோ, தங்கி இருந்தாலோ காவலாளிகளிடம் அவர்களை கண்காணிக்கச் சொல்லலாம். சந்தேகம் அதிகரித்தால் காவல் துறைக்குத் தகவல் கொடுக்கலாம்.
பக்கத்து வீட்டில் இருப்பவர்களை எளிதாக தொடர்பு கொள்ளும் வகையில் தகவல் தொடர்புகளை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். அக்கம்பக்கத்தினருடன் நல்ல நட்புறவுடன் இருப்பது கூடுதல் பாதுகாப்பாக இருக்கும்.
வீட்டிற்குள் வரும் திருடர்களின் முக்கியக் குறி நகை மற்றும் பணமாக இருக்கிறது. எனவே உங்கள் தேவைக்கான பணம் மற்றும் நகைகளை மட்டுமே கையில் வைத்து பயன்படுத்துங்கள். அதிகமாக இருக்கும் பணம், நகைகளை வங்கிகளில் பாதுகாக்க வேண்டும்.
விஷம நோக்கத்துடன் வருபவர்களைச் சமாளிக்க தற்காப்பு வித்தைகளை கற்று வைத்திருப்பது பெண்களுக்கு நல்ல பாதுகாப்பை வழங்கும். பாதுகாப்புகளை மீறி குற்றம் நடக்கும் இக்கட்டான சூழலில் சாதுரியமாக செயல்படும் திறனையும் வளர்த்துக் கொள்ள வேண்டும்.
உங்களின் ரகசியங்கள் கசிந்து விடுவதே ஆபத்துகளுக்கு காரணமாகும். நீங்கள் தனிமையில் இருக்கிறீர்கள் என்பது யாருக்கும் தெரியாமல் பார்த்துக் கொள்ளுங்கள். உங்களிடம் எவ்வளவு பணம், நகை இருக்கிறது, அவற்றை எங்கே வைத்திருக்கிறீர்கள் போன்ற விவரங்களையும் உங்கள் குடும்பத்தினரைத் தவிர மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்ளக்கூடாது.