பிக்பாஸ் நிகழ்ச்சி எவ்வளவு பேமஸ் என்பதை நாங்கள் சொல்லி தெரியவேண்டியது இல்லை. இந்நிலையில் கடந்த இரண்டு வருடமாக பிக்பாஸ் நிகழ்ச்சியை விஜய் டிவி தான் ஒளிப்பரப்பி வருகின்றது.
ஆனால், இந்த முறை கலர்ஸ் தமிழ் சேனல் இந்த நிகழ்ச்சியை ஒளிப்பரப்பும் என கிசுகிசுக்கப்படுகின்றது, இவை எந்த அளவிற்கு உண்மை என்றும் தெரியவில்லை.
இந்நிலையில் கலர்ஸ் சேனலில் நேற்று நயன்தாரா நம் சேனலுக்கு வருகிறார், செம்ம சர்ப்ரேஸ் உள்ளது என கூறினார்கள்.
இதை வைத்து பார்க்கையில் ஒருவேளை பிக்பாஸ் நிகழ்ச்சியை நயன்தாரா தொகுத்து வழங்குகின்றாரா என ரசிகர்கள் டுவிட் செய்து வருகின்றனர், எது உண்மை என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.