முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஸ அமெரிக்காவுக்கு வந்த வேளை அவருடைய பயணம் தொடர்பில் கண்காணிப்புச் செய்தவர்கள் இருந்ததாக ஐக்கிய நாடுகளின் முன்னாள் அதிகாரி யஸ்மின் சூகா தெரிவித்துள்ளார்.
இதனால், முடியுமானால் மீண்டும் ஒருமுறை அமெரிக்காவுக்கு வருகை தருமாறு தான் அவரிடம் கேட்டுக் கொள்வதாகவும் அவர் கூறியுள்ளார்.
அமெரிக்காவில் கோட்டாபய ராஜபக்ஸ வழக்குக்குள் சிக்கிக் கொண்டதற்கு அவரின் பெருமைத் தனமே காரணமாகும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கோட்டாபய ராஜபக்ஸவுக்கு எதிராக கலிபோர்னியா நீதிமன்றத்தில் ரொய் நிறுவனத்துடன் யஸ்மின் சூகாவும் வழக்கொன்றை தாக்கல் செய்திருந்தார் எனவும் இன்றைய சகோதார நாளிதழொன்று தெரிவித்துள்ளது.