உங்களுக்கு மூக்கில் இருந்து அடிக்கடி ரத்தம் வடிகிறதா,

குழந்தைகள், கர்ப்பமான பெண்கள், உடல் நலிவுற்ற முதியவர்கள் என யாருக்கு வேண்டுமானாலும் மூக்கில் ரத்தம் வரலாம்.

▪ மூக்கில் ரத்தம் வடிதல் இரண்டு வகைப்படும்.

1) முன்புறமாக ரத்தம் வடிதல் :

மூக்கின் முன்புறமாக ரத்தம் வடிதல் சாதாரணமான விஷயமே. இதனால் உடலுக்கு எந்த பாதிப்பும் இல்லை.

2) பின்புறமாக ரத்தம் வடிதல் :

இந்த வகை காயங்களில், ரத்தம் மூக்கின் பின்பகுதியில் இருந்து வரும். இதில் ரத்தப் போக்கு அதிகம் இருக்கும். இதுபோன்று நடந்தால் உடனடியாக மருத்துவரிடம் கலந்தாலோசிப்பது நல்லது.

▪ மூக்கில் ரத்தம் வடிவதற்கான காரணிகள்:

மூக்கின் உள் இருக்கும் ரத்த நாளங்கள் மிகவும் மெல்லியதாக இருப்பதால், அது உடைய வாய்ப்புண்டு. மூக்கில் அடிபடுதல், வறண்ட காற்று, அலர்ஜி ஏற்படுதல், நாசித் துவாரங்களில் ஏற்படும் வறண்ட உணர்வு, தொடர் தும்மல்.

▪ தொடர்ந்து 20-25 நிமிடங்களுக்கு மேல் ரத்தம் வடிவது ஆபத்தான அறிகுறிகளில் ஒன்று.

▪ மூக்கில் ரத்தம் வடிவதை எவ்வாறு தடுப்பது:

  • ஈரத்துணியைப் பயன்படுத்தி மூக்கில் ஒத்தடம் தர வேண்டும்.
  • மூக்கில் இரத்தம் வரும் போது, ஒரு துணியில் ஐஸ்கட்டிகளை வைத்து கட்டி மூக்கின் மேல் சில நிமிடங்கள் வைக்க வேண்டும்.
  • கை கட்டை விரல் மற்றும் ஆள்காட்டி விரலால் 5 நிமிடம் முதல் 10 நிமிடம் வரை மூக்கை கொஞ்சம் அழுத்தி பிடிக்கவும். அப்போது வாயை திறந்து கொண்டு வாயால் சுவாசிக்கவும்.