பல கோடிகளை வாரிக்குவித்த படத்தின் ரீமேக்கில் திரிஷா!

சினிமா படங்கள் வெளியாகும் முன்பே பாக்ஸ் ஆஃபிஸ் வசூல் தோராயமாக கணிக்கப்பட்டு விடுகிறது. முதல் மூன்று நாட்கள் மிக முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.

அண்மையில் ஹிந்தி படம் அந்தாதுன், சீனாவில் பியானே பிளேயர் என்ற பெரில் வெளியாகி 13 நாட்களில் ரூ 200 கோடி வசூலை அள்ளியது. ஆயுஷ்மான் குரானா, ராதிகா ஆப்தே, தபு ஆகியோர் இப்படத்தில் நடித்திருந்தனர்.

தற்போது இப்படத்தை தமிழில் தயாரிக்க இருக்கிறார்களாம். இதில் திரிஷா சித்தார்த் ஜோடி நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இவர்கள் இருவரும் ஜோடியாக நடித்த ஆய்த எழுத்து, அரண்மனை 2, தெலுங்கில் நூ ஒஸ்தானண்டே படங்கள் ஹிட்டானது குறிப்பிடத்தக்கது.