முதுகு வலியை நிரந்தரமாக குணமாக பூண்டு பால்!

பூண்டில் மருத்துவக் குணங்கள் அதிகமாக நிறைந்துள்ளதால் வெறும் வயிற்றில் சாப்பிடும் போது ஏராளமான நன்மைகள் கிடைக்கின்றது.

பூண்டில் விட்டமின் B6, C, கனிமங்கள், மாங்கனீசு, ஆன்டி-பயாடிக் போன்ற அத்தியாவசிய சத்துக்கள் அதிகமாக நிறைந்துள்ளது.

இத்தனை மருத்துவ குணங்கள் நிறைந்த பூண்டை தினமும் பாலில் போட்டு குடித்து வந்தால் பல நன்மைகளைப் பெறலாம்.

தேவையான பொருட்கள்

  • பால் – 200 மிலி
  • பூண்டு – 4 பற்கள்
தயாரிக்கும் முறை
  • முதலில் ஒரு பாத்திரத்தில் பாலை ஊற்றி அதில் பூண்டைத் தட்டிப் போட்டு, நன்கு வேக வைத்து வெந்ததும் பனங்கற்கண்டு, மிளகுத்தூள், மஞ்சள்தூள் ஆகியவை சேர்த்து சிறிது நேரம் கொதிக்க வைத்து இறக்கி பூண்டை நன்கு மசித்தால் பூண்டு பால் தயார்.
  • இந்த பாலை தினமும் குடிக்க வேண்டும். இப்படி குடிப்பதால், இடுப்பு அல்லது முதுகு வலி சற்று குறைந்திருப்பதை உணர்வீர்கள். வலி முழுமையாக போய்விட்டால், இந்த பாலைக் குடிப்பதை நிறுத்திக் கொள்ளலாம்.
நன்மைகள்
  • பூண்டு கலந்த பால் உடல் பருமனைக் குறைத்து, இதயத்தில் ஏற்படும் அடைப்புகளை நீக்கி, ரத்தத்தில் சேரும் கொழுப்புகளை குறைக்கிறது.
  • இடுப்பு வலி, மூட்டு வலி, வாய்வு பிடிப்பு மற்றும் கால் வலி போன்ற பிரச்சனை உள்ளவர்கள், பூண்டை பாலில் காய்ச்சி குடித்தால் நல்ல பலனைக் காணலாம்.
  • ரத்த அழுத்த பிரச்சனையை கட்டுப்படுத்தி, ரத்தோட்டத்தை சீராக்கி, பெண்களுக்கு ஏற்படும் மாதவிலக்கு பிரச்சனையை குணமாக்குகிறது
  • மலேரியா, காசநோய், யானைக்கால் நோய் மற்றும் ப்ளேக் போன்ற நோய்களை உண்டாக்கும் கிருமிகளுக்கு எதிராக செயல்படுகிறது.
  • தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் பூண்டு பாலைக் குடித்து வந்தால், தாய்ப்பாலின் சுரப்பு அதிகரிக்கும், குழந்தைகளின் ஆரோக்கியமும் மேம்படும்.
  • நுரையீரல் அழற்சி போன்ற பிரச்சனை உள்ளவர்கள், இந்த பூண்டு கலந்த பாலை குடித்து வந்தால், விரைவில் நுரையீரல் அழற்சியை குணமாக்கலாம்.
  • பூண்டு பாலானது நாம் சாப்பிடும் உணவுகளை ஜீரணமாக்க உதவும், செரிமான திரவத்தை தூண்டி, உணவுகளை எளிதில் செரிமானம் அடைய உதவுகிறது.
  • பூண்டு கலந்த பாலை காலையில் வெறும் வயிற்றில் குடிப்பதன் மூலம் நம் வயிற்றில் வளரும் புழுக்களை அழிக்கலாம்.
  • முகப்பரு பிரச்சனைகள் வராமல் தடுக்க பூண்டு கலந்த பாலை முகத்தில் தடவி, கழுவ வேண்டும் அல்லது அந்த பாலை குடித்து வரலாம்