இலங்கையில் தொடர்ச்சியாக நிகழ்ந்த குண்டு வெடிப்புச் சம்பவத்தை தொடர்ந்து அங்குள்ள இந்தியர்களுக்கு முக்கிய அறிவிப்பொன்று விடுக்கப்பட்டுள்ளது.
அதாவது இலங்கையிலுள்ள இந்தியர்கள் ஏதேனும் உதவி தேவைப்படுமாயின் +94777903082, +94112422788, +94112422789, +94777902082, +94772234176 ஆகிய எண்களுக்கு தொடர்பினை ஏற்படுத்த முடியுமென இந்தியாவின் மத்திய அமைச்சர் சுஷ்மா சுவராஷ் தெரிவித்துள்ளார்.
குறித்த விடயத்தை சுஷ்மா சுவராஷ், தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
மேலும் இலங்கையில் இடம்பெற்ற சம்பவம் குறித்து இந்திய தூதுவரிடம் கேட்டறிந்து கொண்டதுடன் இவ்விடயத்தை தொடர்ந்து அவதானித்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.