வத்திக்கானில் இன்று இடம்பெற்ற ஈஸ்டர் திருநாள் நிகழ்வில் உரையாற்றிய பாப்பரசர், இலங்கையில் இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்தவர்களிற்கு அஞ்சலி செலுத்தினார்.
ஈஸ்டர் பண்டிகை காலையில் இலங்கையில் நடந்த தாக்குதல்கள் பற்றிய வலி நிறைந்த செய்தியை அறிந்ததாகவும், கிறிஸ்தவ சமுகத்திற்கு தனது அன்பையும், ஆதரவையும் தெரிவிப்பதாகவும், உயிரிழந்தவர்கள், காயமடைந்தவர்களிற்கு பிரார்த்திப்பதாகவும் பாப்பரசர் குறிப்பிட்டார்.