இலங்கையில் பேஸ்புக் மற்றும் சமூக வலைத்தளங்கள் அனைத்தும் முற்றாக முடக்கம்..!

இலங்கையில் பேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்கள் முற்றாக முடக்கப்பட்டுள்ளது.தொடரும் பதற்ற நிலையை தவிரப்பதற்காக சமூக வலைத்தளங்கள் முடக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, பதற்றத்தை மேலும் கூட்டும் நோக்கில் சமூகவலைத்தளங்களில் போலியான புகைப்படங்கள் மற்றும் காணொளிகளை பகிர வேண்டாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் சமூக வலைத்தளங்களினூடாக மத , இன வாதங்களைத் தூண்டும் செய்திகளும் பதிவுகளும் பகிரப்படுவதனால் சமூக வலைத்தளங்கள் முற்றாக முடக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் தொடரும் தொடர்குண்டு வெடிப்புச் சம்பவங்கள் தொடர்பான புகைப்படங்கள், காணொளிகள் ஆகியவை அதிகமாக பகிரப்படுவதால் முற்றாக முடக்கப்பட்டிருக்கின்றது