இலங்கையில் 8 இடங்களில் இடம்பெற்ற குண்டுவெடிப்பு சம்பவத்தில் இதுவரை 262 பேர் இறந்துள்ளதுடன் 450 பேர் படுகாயமடைந்துள்ளனர் என வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயம், நீர்கொழும்பு கட்டுவப்பிட்டி தேவாலயம், மட்டக்களப்பு சியோன் தேவாலயம், ஷங்கிரில்லா நட்சத்திர ஹொட்டலின் மூன்றாவது மாடி, சின்னமன் கிரான்ட் , கிங்ஸ்பெரி நட்சத்திர ஹொட்டல் தெஹிவளை மற்றும் தெமட்டைகொடை ஆகிய 8 இடங்களில் குண்டுவெடிப்பு சம்பவங்கள் நடந்துள்ளன.
சம்பவம் தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூகவலைதளங்களில் வெளியாகி பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், இயேசுவின் சிலை மீது இரத்தம் படிந்திருக்கும் புகைப்படம் தற்போது பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.
இலங்கையை சேர்ந்த நபர் ஒருவர் தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்.
தேவாலயத்தில் குண்டுவெடிப்பு நடந்தபோது அதில் காயமடைந்தவர்கள் மற்றும் இறந்து போனவர்களின் இரத்தம் அங்கிருந்த இயேசு நாதரின் சிலுவையில் தெறித்துள்ளது.
பிதாவே, இவர்களை மன்னியும், தாங்கள் செய்கிறது இன்னதென்று அறியாதிருக்கிறார்கள் என்ற வார்த்தைகள் இயேசு நாதரை சிலுவையில் அறைந்தபோது அவர் சொன்ன வார்த்தைகள்…. !
குறித்த புகைப்படத்திற்கும் அந்த வார்த்தைகள் பொருந்துவதாக சமூக வலைத்தளங்களில் பரவலாக கருத்துக்கள் பகிரப்பட்டு வருகின்றன்மை குறிப்பிடத்தக்கது.