சங்கீர்லா ஹோட்டலில் இடம்பெற்ற குண்டு வெடிப்பில் வவுனியாவை சேர்ந்த இளைஞன் ஒருவர் பலி!

கொழும்பு சங்கீர்லா ஹோட்டலில் இடம்பெற்ற குண்டு வெடிப்பில் வவுனியா – வேப்பங்குளம் மூன்றாம் ஒழுங்கைச் சேர்ந்த இளைஞனொருவன் உயிரிழந்துள்ளார்.

இதன்போது வவுனியா – வேப்பங்குளம் மூன்றாம் ஒழுங்கைச் சேர்ந்த 21 வயதுடைய இஸ்தார் முகமத நளிம் என்ற இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த இளைஞனின் சடலத்தினை வவுனியாவில் இருக்கும் தனது இல்லத்திற்கு கொண்டு செல்ல நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த இனைஞன் ஹோட்டல் முகாமைத்துவ கற்கை நெறிகளை மேற்கொண்டு குறித்த ஹோட்டலில் தொழில் புரிந்து வந்த நிலையிலேயே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இலங்கையின் ஒன்பது இடங்களில் அதாவது மூன்று தேவாலயங்களிலும், மூன்று ஹோட்டல்களிலும் வெடிப்பு சம்பவங்கள் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதனை தொடர்ந்து கொழும்பில் அமைந்துள்ள முக்கிய நட்சத்திரக் ஹோட்டல்களில் இருந்து ஆட்கள் முழுவதுமாக வெளியேற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது