வட மாகாணசபை முன்னாள் உறுப்பினர் ஜி.ரி. லிங்கநாதனின் நெடுங்கேணி வீட்டு வளவினுள் நேற்று இரவு இனந்தெரியாதோர் நடமாடியுள்ளதாக பொலிஸில் முறைப்பாட்டை பதிவு செய்துள்ளார்.
ஞாயிற்றுக்கிழமை ஊரடங்கு சட்டம் அமுலில் உள்ள சமயம் இரவு 10 மணியளவில் தனது வீட்டின் வாயில் கதவை மூடி பூட்டினால் பூட்டிய பின்னர் நித்திரைக்கு சென்றுள்ளார்.
காலை எழுந்து பார்த்தபோது அவரது முன் வாயில் கதவு பூட்டு உடைக்கப்பட்டு வாயிற் கதவு சேதப்படுத்தப்பட்ட நிலையில் காணப்பட்டுள்ளது.
இதன் காரணமாக அச்சமான முன்னாள் மாகாணசபை உறுப்பினர் நெடுங்கேணி பொலிஸில் முறைப்பாட்டை பதிவு செய்துள்ளார்.
இதன் பிரகாரம் பொலிஸார் விசாரணையை மேற்கொண்டுள்ளதுடன் இராணுவத்தினரும் காலை முன்னாள் மாகாணசபை உறுப்பினரின் வீட்டுக்கு சென்று விசாரணையை முன்னெடுத்துள்ளனர்.