இலங்கை குண்டுவெடிப்பில் உயிரிழந்த இந்தியர்களின் எண்ணிக்கை தற்பொழுது 8 ஆக அதிகரித்துள்ளது.
குறித்த தாக்குதலில் நேற்று 3 பேர் உயிரிழந்துள்ளதாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஸ்மா சுவராஜ் தெரிவித்திருந்த நிலையில் தற்பொழுது 8 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதன்படி வேமுராய் துளசிராம்,எஸ்.ஆர் நாகராஜ், கே.ஜி.ஹனுமந்தராயப்பா,எம்.ரங்கப்பா,லட்சுமி,நாராயண் சந்திரசேகர்,ரமேஷ் உள்ளிட்ட எண்மர் உயிரிழந்துள்ளதாக கொழும்பிலுள்ள இந்திய தூதரகம் இன்று திங்கட்கிழமை தெரிவித்துள்ளது.
இலங்கையில் நேற்று இடம்பெற்ற தற்கொலைக்குண்டு தாக்குதலில் 296 பேர் உயிரிழந்துள்ளதுடன், இவர்களில் 35 வெளிநாட்டு பிரஜைகள் உயிரிழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.