நாட்டின் சகல மே தின கூட்டங்களும் ரத்து!

சகல மே தின கூட்டங்களையும் ரத்து செய்வதற்கு பாதுகாப்பு பிரிவு தீர்மானித்துள்ளதாக அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தினத்தன்று நாட்டில் இடம்பெற்ற தொடர் குண்டு வெடிப்பு சம்பவங்களை அடுத்து கடந்த இரண்டு தினங்களாக நாட்டில் அச்சச் சூழல் காணப்பட்டுவருகின்றது.

இந்தநிலையில் மே தின கூட்டங்களை ரத்து செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது.