இலங்கை குண்டுவெடிப்பில் தன் மூன்று பிள்ளைகளையும் இழந்த கோடீஸ்வரர்..

ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு டென்மார்க் நாட்டிலிருந்து இலங்கைக்கு சுற்றுலா மேற்கொண்ட தொழில் அதிபர் ஆண்டர்சனின் மூன்று குழந்தைகளும் குண்டுவெடிப்பில் பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வருடந்தோறும் வெளியாகும் போர்ப்ஸ் பட்டியலின்படி, டென்மார்க் நாட்டின் முதல் பணக்காரர் என்ற இடத்தை பெற்றவர் தொழிலதிபர் ஆண்டர்சன். இவர் பல்வேறு தொழில் நிறுவனங்களை நடத்திவருபவர். இவருக்கு 4 குழந்தைகள் உள்ளனர். கோடை விடுமுறை என்பதால் ஒரு அழகான நாட்டிற்கு சென்று மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் மென திட்டம் போட்டு இலங்கைக்கு வந்துள்ளனர்.

இந்நிலையில் நேற்று இலங்கையில் பிரபலதேவாலயங்கள் மற்றும் ஒரு சில முக்கிய இடங்கள் என எட்டு இடங்களில் நடைபெற்ற குண்டுவெடிப்பு சம்பவத்தில் 300க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.அதில் பலரது உடல்களை அடையாளம் கூட காண முடியவில்லை. இந்த சம்பவத்தில் 32 வெளிநாட்டினரும் இறந்துள்ளதாக தகவல் வெளியானது.

மூன்று குழந்தைகளையும் பலி

இந்த பட்டியலில் தொழிலதிபர் ஆண்டர்சனின் மூன்று குழந்தைகளும் இடம் பெற்றுள்ளனர் என்பது மிகவும் வருத்தமான விஷயம். குழந்தையை பறிகொடுத்த தவிக்கும் ஆண்டர்சனின் சொத்து மதிப்பு ரூபாய் 50,000 கோடி. அதுமட்டுமல்லாமல் ஸ்காட்லாந்து நாட்டின் உள்ள நிலப்பரப்பில் ஒரு சதவிகித நிலம் இவருக்கு சொந்தமானது என்பது கூடுதல் தகவல். அதாவது ஏக்கர் அளவில் சொல்ல வேண்டுமென்றால் இரண்டு லட்சம் ஏக்கர் நிலம் உள்ளது.

பிரிட்டனை பொறுத்தவரையில் அதிக அளவில் சொந்தமாக நிலம் வைத்திருப்பவர்கள் பட்டியலில் இவருக்கு இரண்டாவது இடம் கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது. இத்தகைய பெரிய செல்வந்தர் இலங்கை ஒரு அழகான நாடு என்ற எண்ணத்தில் கோடையில் தங்களது பிள்ளைகளோடு சந்தோஷமாக இருக்க வேண்டும் என கொழும்பு வந்துள்ளார்.

அப்போது எதிர்பாராத விதமாக நடந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் தங்களுடைய குழந்தைகளை பறிகொடுத்து விட்டு வெறும் கையோடு நிற்கிறார். இந்த சம்பவம் உலக அளவில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.