தெலுங்கானாவில் நடந்த பயங்கரம்..

தெலுங்கானாவில் பயங்கரம்..! ஒவ்வொன்றும் 4 கிலோ 5 கிலோ எடையில் ஆலங்கட்டி மழை வியந்து பார்க்கும் பொதுமக்கள்..

தெலுங்கானாவில் திடீரென பெய்த ஆலங்கட்டி மழையால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவுகிறது. பொதுவாகவே கோடை காலத்தில் மழை பெய்தால் சுட்டெரிக்கும் வெயிலில் இருந்து தப்பித்துக் கொள்ள ஒரு வாய்ப்பு கிடைக்கும் என மக்கள் மகிழ்ச்சியாக இருப்பார்கள். ஆனால் இந்த கோடை வெயிலில் யாரும் எதிர்பாராத நிலையில் ஆலங்கட்டி மழை தெலுங்கானா மாநிலத்தில் பெய்து உள்ளது.

ஆலங்கட்டி மழை என்றால் இதற்கு முன் பெய்தது போல சிறிய சிறிய கற்கள் அல்ல. ஒவ்வொரு கல்லும் மூன்று கிலோ முதல் 5 கிலோ வரை ஆங்காங்கு பெரிய திட மழை பெய்துள்ளது. பல பகுதிகளில் கோல்ப் அளவில் ஆலங்கட்டி மழை பொழிந்துள்ளது. இதனை அங்குள்ள மக்கள் மழை நின்றவுடன் கற்களை எடுத்து ஆச்சரியமாக பார்த்து அதனை போட்டோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து உள்ளனர்.

இதுவரை நான் இதுபோன்ற ஆலங்கட்டி மழை பார்த்ததே இல்லை என்றும் அதுவும் இவ்வளவு பெரிய கற்களா ? என வியப்புடன் பார்த்து அவர்களது ஆச்சர்யத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.