பெண்கள் இந்த 8 கேள்வி கேட்டால் நிச்சயம் இல்லை என்று கூறுங்கள்…

பொண்ணுங்க எப்பவும், எது கேட்டாலும் எஸ் தான சொல்லணும்னு எதிர்பார்ப்பாங்க… இதென்னடா இவன் நோ சொல்ல சொல்றான்னு பார்க்கிறீங்களா… இல்ல பாஸ்.. பொண்ணுங்க ஒரே கேள்விய எத்தனை வகையா வேணாலும் திருத்தி, திருப்பி கேட்டு நம்ம வாயில இருந்து எதாச்சும் பிடுங்க பார்ப்பாங்க. நாம தான் உஷாரா இருக்கணும்.

உதாரணத்துக்கு… நான் குண்டா இருக்கனான்னு கேட்டா… நீங்க ஆமா, இல்லன்னு சொல்லலாம்.. பெரும்பாலும் இல்லன்னு தான் சொல்லணும் அது வேற கதை. இதுவே நான் அந்த பொண்ண விட குண்டா இருக்கேனான்னு கேட்டா… நீங்க என்ன பதில் சொல்வீங்க… ஆமான்னு சொன்னாலும் சிக்கல்… இல்லன்னு சொன்னாலும் சிக்கல்… இப்படி ஏடாகூடமா கேள்வி கேட்டு… அவங்க மண்டையையும் பிச்சுக்கிட்டு… நம்ம மண்டையையும் பிக்கிறது பொண்ணுங்களுக்கு கைவந்த கலை. சரி! மேட்டருக்கு வருவோம்… பொண்ணுங்க இந்த கேள்வி எல்லாம் கேட்டா… அச்சு பிசறாம ‘நோ’ சொல்ல கத்துக்குங்க. இல்லன்னா ‘நோவு’ பட்டு போயிடுவீங்க…

குண்டு
நாம மேல ஆல்ரெடி சொன்ன விஷயம் தான். இத படிச்சுட்டு இருக்க உங்க லைப்லயும் இப்படி ஒரு சம்பவம் நடந்திருக்க நிறையவே வாய்ப்புகள் இருக்கு. ஒவ்வொரு தடவையும் புதுசா வாங்குன ட்ரெஸ் வீட்டுல வந்து போட்டுப் பாக்கும் போதும். ரொம்ப நாள் கழிச்சு அவங்களுக்கு பிடிச்ச பழைய ட்ரெஸ் ஏதாவது போட்டுப் பார்க்கும் போதும் பொண்ணுங்க இந்த கேள்விய அவங்க வீட்டுக்காரர் இல்ல லவ்வர் கிட்ட கேட்பாங்க. அதுக்கு நீங்க சொல்ல வேண்டிய பதில்… நோ’ம்மா நீ எப்பவும் போல தான் இருக்க. ட்ரெஸ் சைஸ் தான் தப்புன்னு நினைக்கிறேன்ங்கிற மாதிரி நீங்க மழுப்பலான பதில் சொல்லி எஸ்கேப் ஆகிடனும்.

தொல்லை
நீங்க பிரெண்ட்ஸ் கூட வெளியில போகணும், ஆபீஸ் ட்ரிப் இருக்கு, கூட வேலை பண்ற பொண்ணுக்கு… நல்லா நோட் பண்ணுங்க பொண்ணுக்கு கல்யாணம்… இப்படி எல்லாம் ரீசன் சொல்லி வெளிய போக பர்மிஷன் கேட்டீங்கன்னா.. அப்பவே இன்ஸ்டன்ட் பிளான் ஒன்னு போட்டு. நான் உன் கூட போகலாம்ன்னு பார்த்தேன். நீ என்னைவிட்டு தனியா போற… என் கூட நீ டைம் ஸ்பென்ட் பண்ணியே ரொம்ப நாள் ஆச்சுன்னு.. நம்ம பிளானுக்கு மூடுவிழா நடத்திட்டு… நான் ஒன்னும் உன்ன டிஸ்டர்ப் பண்ணிடல தானான்னு ஒரு கேள்வி கேட்பாங்க. உங்களுக்கு சூஸ் தி பெஸ்ட் ஆன்சர்ல கொடுக்கப்படும் ஒரே வாய்ப்பு ‘நோ’ மட்டும் தான். ஆமான்னு சொல்ற அளவுக்கு நாம தைரியசாலி இல்லைங்களே!

அழகு
இதெல்லாம் அனுதினமும் நடக்கும். முக்கியமா கல்யாணம், ஷாப்பிங் மால், தியேட்டர்ன்னு எங்க போனாலும் இந்த காட்சி இல்லாம இருக்காது. வீட்டுல ஆரம்பிச்சு.. ரோட்டுல வண்டி ஓட்டிட்டு போகும் போது, ஃபங்க்ஷன் ஹால்குள்ள நுளைஞ்சதுல இருந்து, வீடு திரும்புற வரைக்கும் நான் அழகா தான இருக்கேன். ஏதும் மோசமா இல்லையேன்னு கேள்வி கேட்டு, கேட்டு நச்சரிப்பாங்க. ஆனால், ஒரு தடவை கூட டென்ஷன்ல ஆமா… மேக்கப் ஓவரா தான் இருக்கு. அழகா இல்லன்னு சொல்லிடாதீங்க. அப்பறம் ஏன் நான் வீட்டுல கேட்டப்ப நீ சொல்லலன்னு சொல்லுவாங்க. வீட்டுலையே சொல்லி இருந்தா… இவங்க ஃபங்க்ஷனுக்கே கிளம்பி இருக்க மாட்டாங்க. என்ன பண்ண முடியும்… நோ மா… நீ ரொம்ப அழகா இருக்கன்னு சொல்லி கேஸ் குளோஸ் பண்ணிட வேண்டியது தான் ஒரே வழி

டிரஸ்
ஆம்பிளைங்களுக்கு ஒரே ஒரு டவுட்டு தான் வரும். போன தடவ இதே ஜீன்ஸ் தான் போட்டோமா இல்லையா…? மத்தப்படி அந்த ப்ளூ ஜீன்ஸ் இல்ல பிளாக் ஜீன்ஸ் விட்டா நமக்கு வேற ஆப்ஷனே இல்ல. ஆனா பொண்ணுகளுக்கு அப்படியா… பீரோ முழுக்க ட்ரெஸ் இருந்தாலும். எனக்கு புது ட்ரெஸ் இல்ல, வெளிய போடுற மாதிரி ட்ரெஸ் இல்லன்னு சொல்லி புலம்புவாங்க. புலம்பி முடிச்சு நாலஞ்சு ட்ரெஸ் மாத்திப் போட்டு பார்த்து அதுல ஒன்னு அவங்க மனசுக்கு பிடிச்சுட்டாலுமே கூட, நம்மக்கிட்ட ஒரு பேச்சுக்கு எப்படி இருக்கு, நல்லா இருக்கா? இல்லையா?னு கேட்பாங்க. நீங்க போட்ட பிளான் நல்ல படியா முடியணும்னா… நோ மா நல்லா இருக்கு, ரொம்ப நல்லா இருக்கு வா கிளம்பலாம்ன்னு அப்படியே இழுத்துட்டு கிளம்பிடனும்.

சாப்பாடு
இதுல பொண்ணுங்க ரெண்டு வகை. ஒருத்தங்க நல்ல சமைச்சுட்டு ஏதோ தெரியாம சின்ன தவறு நடந்திருக்குமோ, சரியான ருசி இது இல்லையோங்கிற சந்தேகத்துல… சாப்பாடு நல்ல இருக்கா, இல்லையான்னு கேட்கிறவங்க. ரெண்டாவது வகை ஒன்னு இருக்கு. அவங்க வெச்ச சாப்பாடு நல்லா இல்லன்னு அவங்களுக்கே தெரியும். சமைக்கும் போது அவங்களே சாப்பிட்டு பார்த்துட்டு தான் நம்மக்கிட்ட கொண்டுட்டு வருவாங்க. ஆனாலும், நாம நல்லா இல்லன்னு சொல்லிட கூடாது… அவங்க அடிச்சே கேட்டாலும்… நோ மா சாப்பாடு நல்லா தான் இருக்கு. கொஞ்சம் உப்பு மட்டும் போட்டா போதும். மத்தப்படி ஃபெண்டாஸ்டிக்னு சொல்லிட்டு எஸ்கேப் ஆயிடுங்க. நமக்கு வெளிய ஊரு பிரியாணி பொட்டலம் கிடைக்காமலா போயிடும்.

விருப்பம்
பொண்ணுகளுக்கு என்ன தான் தங்களுக்கு ஒரு பொருள் பிடிச்சாலும்.. அது தன்னோட கணவனுக்கும் பிடிக்கணும்னு எதிர் பார்ப்பாங்க. உங்க பார்வையில அது அடச்சீ என்னடா இது நாராசமான டேஸ்ட்டா இருக்குன்னு ஒரு எண்ணம் எட்டிப் பார்க்கலாம். அதை எல்லாம் அப்படியே குழித் தோண்டி புதைச்சுட்டு. நோ மா டியர்… நீ சூஸ் பண்ணதாச்சே…. அதெப்படி மோசமா இருக்கும். செம்மையா இருக்குன்னு சொல்ல பழகுங்க.

எக்ஸ் லைப்
ஒருவேளை உங்களுக்கு ஒரு எக்ஸ் லைப் இருந்து. அத நீங்க தெரியாம உங்க மனைவிக்கு தெரியப்படுத்தி இருந்தீங்கன்னா… சத்தியமா அத சாகுற வரைக்கும் அவங்க மறக்கவே மாட்டாங்க. அடிக்கடி இன்னும் அந்த பொண்ண நெனச்சுட்டு தான் இருக்கீங்களா? அவ நியாபகம் எல்லாம் வருதான்னு கேட்டா… இதுக்கு நோ தான் சொல்லணும்ன்னு நாங்க சொல்லிக் கொடுக்க தேவையில்ல. ஆனா, சிலர் ஒரு எமோஷனல ஆமாம்மா… ஃபர்ஸ்ட் லவ் எப்படி மறக்க முடியும்ன்னு சொல்லிடுவாங்க. நீங்க சொல்லிட்டு அடுத்த னாலே மறந்துடுவீங்க. ஆனா, அவங்க வாழ்நாள் முழுக்க மறக்க மாட்டாங்க. அதனால என்ன எமோஷன் வந்தாலும் வேற பக்ககமா அடக்கிட்டு… நீ சொல்லி தான் எனக்கே நியாபகம் வருது. நான் அதெல்லாம் எப்பவோ மறந்துட்டேன்ன்னு ஒரு பிட்டு போட்டிடுங்க.

செல்ஃபீ
பசங்களே பத்து செல்ஃபீ எடுத்தா அதுல ஒன்னு தான் சூஸ் பண்ணி. அத எடிட் பண்ணி போஸ்ட் பண்ணுவாங்க. பொண்ணுகள கேட்கவா வேணும். நூறு ரியாக்ஷன்ல ஆயிரம் செல்ஃபீ எடுத்து அதுல பத்து, பதினஞ்சு எடிட் பண்ணி. அப்பப்போ போட்டு லைக்ஸ் வாங்கிட்டே இருப்பாங்க. இதுவே அவங்க ஒரு லவ்வுல இருந்தாங்கன்னு வெச்சுக்குங்களே. முதல் ஆளா அந்த லவ்வர் தான் லைக் போட்டு கமென்ட் பண்ணனும். ஒருவேளை… போஸ்ட் பண்றதுக்கு முன்னாடி உங்ககிட்ட நல்லா இருக்கா, இல்லையான்னு ஒரு சஜ்ஜெஷன் கேட்டா கண்ணா மூடிக்கிட்டு நோ மா… சூப்பரா இருக்குன்னு மட்டும் தான் பதில் சொல்லணும். இல்லாட்டி நீங்க ஒரு பத்து இருபது போட்டோக்கு ரிவியூ பண்ண வேண்டிய கட்டாயம் ஏற்படலாம். ஆரம்ப காலத்துல இது நல்லா தான் இருக்கும். ஆனா, காலம் பூரா இப்படி தான்னு ஒரு நிலைமை வந்தா எப்படி இருக்கும்? எனவே, பாதுகாப்பா சூதானமா இருந்துக்குங்க மக்களே!