கடந்த ஏப்ரல் 18ம் தேதி தமிழகமே மிகவும் பரபரப்பாக இருந்தது. எல்லோரும் ஓட்டு போட்டுவிட்டோம் என சமூக வலைதளங்களில் பதிவு செய்து வண்ணம் இருந்தனர்.
பிரபலங்களும் காலையிலேயே வந்து தங்களது கடமையை நிறைவேற்றினர்.
ஆனால் சிவகார்த்திகேயன் ஓட்டு போடும் போது மட்டும் அவரது பெயர் லிஸ்டில் இல்லை என பிரச்சனை ஆனது. பின் ஏகப்பட்ட வேலைகளுக்கு பின் அவர் ஓட்டுபோட்டதாக தன்னுடைய டுவிட்டரில் பதிவு செய்தார்.
தற்போது நடிகர் சிவகார்த்திகேயன் வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாமல் வாக்கு போட்டிருக்கிறார். அவருக்கு வாக்களிக்க அனுமதித்த அதிகாரி மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி கூறியுள்ளார்.