கொத்மலை – தவலந்தென்ன, பூண்டுலோயா வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் மூவர் உயிரிழந்துள்ளனர்.
அட்டபாகே நோக்கி பயணித்த காரொன்று வேகக்கட்டுப்பாட்டை இழந்து வீதியிலிருந்து விலகி கால்வாயொன்றினுள் வீழ்ந்து விபத்திற்குள்ளாகியது.
இந்த விபத்தில் பெண்ணொருவர் உள்ளிட்ட மூவர் காயமடைந்த நிலையில், அவர்கள் கொத்மலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
எனினும், சிகிச்சை பலனின்றி மூவரும் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவத்தில் அட்டபாகே பகுதியை சேர்ந்த 70, 80 மற்றும் 78 வயதான மூவரே உயிரிழந்துள்ளனர்.