கொழும்பில் பயங்கரக் குண்டுகள் பொருத்தப்பட்ட வாகனங்கள் உலாவித் திரிவதாக பொலிஸார் விடுத்துள்ள அவசர எச்சரிக்கையினையடுத்து, பெரும்பாலான அரச மற்றும் தனியார் நிறுவனங்கள் முடப்பட்டுள்ளன.
ஒரு லொறி உள்ளடங்கலாக சில வாகனங்களில் அபாயகரமான வெடிமருந்துகள் நிரப்பப்பட்டு அவை கொழும்பின் பல பாகங்களிலும் உலாவித்திரிவதாக புலனாய்வுத் தகவல்கள் பொலிஸாருக்கு கிடைத்தன.
இதனையடுத்து கொழும்பிலுள்ள சகல பொலிஸ் நிலையங்களுக்கும் உசாராக இருக்குமாறு கட்டளை பறந்தது.
இந்த நிலையில், அரச மற்றும் தனியார் நிறுவனங்கள் உடனடியாக தமது பணிகளை இடை நிறுத்தி மூடிக்கொண்டுள்ளதாக, தெரியவந்துள்ளது